2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மியின் ரகசியங்கள் கண்டுபிடிப்பு!

மம்மியின் ரகசியங்கள்

by Suresh, Dec 8, 2017, 14:14 PM IST

அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, நீண்டகாலமாக திறக்கப்படாமல் இருந்த எகிப்து மம்மியை, அமெரிக்காவிலுள்ள ஓர் ஆய்வக விஞ்ஞானிகள் அதி நவீன முறையில் ஸ்கேன் செய்துள்ளனர்.

Mummy

Photo courtesy - Northwestern university

சிகாகோவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள இந்த மம்மியில், 1,900 ஆண்டுக்கு முன்பு இறந்த ஐந்து வயது சிறுமியின் உடல் இருப்பது தெரியவந்துள்ளது.

அதில், அந்த சிறுமியின் முகம் வரையப்பட்டு உடலின் மீது இறுக்கமாகச் சுற்றப்பட்டிருக்கும் துணியின் மேலே அந்தப்படம் வைக்கப்பட்டுள்ளது.

படங்களைக் கொண்ட நூற்றுக்கணக்கான ‘மம்மி’களில் இதுவும் ஒன்று. இந்த ஸ்கேனிங் முறையைக் கொண்டு, சிறுமியின் உடல் மீது சுற்றப்பட்டிருக்கும் துணியை அகற்றாமல், அச்சிறுமியின் வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றி அறிவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Mummy

Photo courtesy - Northwestern university

இந்தியாவில், தன் தாத்தாவின் அப்பா பெயர்கூட பல குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவதில்லை. தங்கள் முன்னோர்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் அக்கறை மிகவும் குறைவாகவே உள்ளது. இலக்கியக் குறிப்புகள் மற்றும் சில சொற்பமான ஆவணங்களே இங்கு உள்ளன.

ஆனால், எகித்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன குழந்தையின் உடல் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதும், அதற்கான தொழில் நுட்பம் கையாளப்பட்டுள்ளது என்பதும், அந்நாட்டின் பழங்கால நாகரிகத்தின் சிறப்பை எடுத்துரைப்பதாக உள்ளது.

You'r reading 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மியின் ரகசியங்கள் கண்டுபிடிப்பு! Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை