சென்னை மெட்ரோ ரயிலில் பொது மக்கள் இலவசமாக பயணம் செய்ய 5வது நாளாக இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேரு பூங்கா-சென்டிரல் மற்றும் சின்னமலை இடையிலான மெட்ரோ ரயில் சேவையின் புதிய வழித்தடம் கடந்த 25ம் தேதி தொடங்கப்பட்டது. அன்று முதல் மூன்று நாட்களுக்கு பொது மக்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டது. இதனால், பொது மக்கள் உற்சாகமடைந்தனர். விடுமுறை நாட்கள் என்பதால் பெற்றோர் குழந்தைகளுடன் புதிய அனுபவத்தை பெற மெட்ரோ ரயிலுக்கு விரைந்தனர். அதன்படி, முதல் மூன்று நாட்களில் மட்டும் மூன்று லட்சம் பேர் மெட்ரோவில் பயணம் செய்தனர்.
இந்நிலையில், பொது மக்களுக்கு மேலும் இன்பதிர்ச்ச அளிக்கும் வகையில் 4வது நாளாக நேற்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. நேற்று திங்கட்கிழமை என்பதால் அலுவலகம் செல்வோர் பலர் மெட்ரோவில் பயணம் செய்தனர். இருப்பினும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குவிந்த கூட்டத்தைவிட நேற்று மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்துள்ளது.
இருப்பினும், ஐந்தாவது நாளாக இன்றும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அலுவலக நாட்கள் என்பதால் இன்றும் மக்களின் கூட்டம் குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com