வளர்ச்சி விகிதத்தில் வளரும் இந்தியப் பொருளாதாரம்..!

by Rahini A, May 30, 2018, 13:32 PM IST

இந்தியப் பொருளாதாரம் 2018 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சிறிய வளர்ச்சி கண்டிருப்பதாக ராய்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

2017 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவிகிதமாக இருந்துள்ளது. அது, இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் 7.3 சதவிகிதத்க்கு அதிகரித்துள்ளதாக ராய்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து 55 பொருளாதார வல்லுநர்களிடம் கருத்துகளைப் பெற்று முடிவை வெளியிட்டுள்ளது ராய்டர்ஸ். இதனால், உலகின் வேகமாக வளரும் மிகப் பெரிய சந்தை என்கின்ற பட்டத்தை இந்தியா தக்க வைக்கும் எனப்படுகிறது. இந்தியாவுக்கு அடுத்ததாக சீனாவின் வளர்ச்சி இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கு 6.8 சதவிகிதமாக இருக்கிறது.

6.9 முதல் 7.7 சதவிகிதம் வளர்ச்சி இருக்கும் என்று கணிப்பு, 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இந்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. இதன் பின்னர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தியது. இதனால், தொடர்ந்து பல காலாண்டுகள் இந்தியாவின் வளர்ச்சி இறங்கு முகமாகவே இருந்தது.

நாட்டின் தெற்கு மாநிலமான கேரளாவில் பருவ மழை வழக்கத்துக்கு மாறாக சில நாட்கள் முன்னதாகவே ஆரம்பமாகி உள்ளது. இதனால், விவசாய கொள்முதல் அதிகமாக இருக்கும் எனவும், அது பொருதார உயர்வுக்கு வித்திடும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர். 

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading வளர்ச்சி விகிதத்தில் வளரும் இந்தியப் பொருளாதாரம்..! Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை