பார்முலா 1 கார் பந்தயத் தொடரின் அணி நிர்வாகப் பதவியை இழந்தாலும் அணியின் பங்குதாரராகத் தொடர்ந்து விஜய் மல்லையா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அணி தலைவராகவும் திகழ்வார் மல்லையா.
இந்நிலையில் சஹாரா ஃபோர்ஸ் இந்தியா அணியின் துணை தலைவராக பாப் ஃபேர்ன்லி தொடர்ந்து தான் வகித்து வந்த பதவியிலேயே நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது. தற்போது விஜய் மல்லையா கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டு காலியாக உள்ள அந்தத் தலைமைப் பதவியை விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் ஏற்றுக்கொண்டு சஹாரா ஃபோர்ஸ் அணியின் தலைமை நிர்வாக இயக்குநராகப் பணியாற்ற உள்ளார்.
இதுவரையில் பார்முலா எஃப் 1 பந்தயத் தொடரில் எந்தவகையிலும் உறுப்பினராகக் கூட இல்லாத சித்தார்த் மல்லையா, இதுவரையில் கிரிக்கெட் லீக் தொடரான ஐபிஎல் போட்டித் தொடரில் பெங்களுரூ ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் தலைமை நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மல்லையா வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், தான் சந்த்தித்து வரும் சட்ட ரீதியிலான பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவும் இந்த சட்ட சிக்கல்களால் நிறுவனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.