புதிதாகக் குடி வருகிறீர்களா..? ஒரு நாய் மட்டும் தான் வளர்க்கணும்!

by Rahini A, Jun 10, 2018, 18:12 PM IST

பெங்கரூளு மாநகராட்சி ஒரு புதிய விதியாக ஒரு பிளாட்டில் ஒரு நாய் மட்டுமே இருக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விதி, நாய் வளர்ப்பாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், `இனி ஒரு பிளாட்டில் ஒரேயொரு நாய் மட்டுமே இருக்க முடியும்.

அதைப் போல, சொந்த வீடாக இருந்தால் மூன்று நாய்களுக்கு மேல் இருக்க அனுமதி கிடையாது. மேலும், இனி நாய்களின் கழுத்தில் கட்டப்படும் பெல்ட் உடன் ரேடியோ காலர் பொருத்தப்பட வேண்டும்.

அதனுடன், ஒரு சிப்-ஐயும் பொருத்தியிருக்க வேண்டும். இந்த சிப் பொருத்தப்படாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட நாயின் முதலாளிக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய விதிகள் நாய் வளர்ப்பாளர்கள் மத்தயில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிறைய பேர், #notwithoutmydog என்ற ஹாஷ்-டேக்கில் இந்த புதிய விதிகளுக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். change.org இணையதளத்தில் பெங்களூரு மாநகராட்சி விதித்த இந்த புதிய விதிமுறைகளுக்கு எதிராக பெட்டிஷன் உருவாக்கப்பட்டது. இந்த பெட்டிஷனுக்கு ஆதரவாக இதுவரை 6,000 பேர் கையெழுத்திட்டு உள்ளனர். `எங்கள் நாய் எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கம்.

அதில் கட்டுப்பாடு போட யாருக்கும் அனுமதி கிடையாது. இது எங்கள் உரிமையில் நேரடியாக தலையிடும் செயல். உடனடியாக இந்த விதிமுறைகளை பெங்களூரு மாநகராட்சி திரும்ப பெற வேண்டும்' என்று நாய் வளர்ப்பாளர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

You'r reading புதிதாகக் குடி வருகிறீர்களா..? ஒரு நாய் மட்டும் தான் வளர்க்கணும்! Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை