ஆர்.கே.நகரில் போலி வாக்களர்களை நீக்க கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
ஆர்.கே நகர் தொகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட போலி வாக்காளர்களை நீக்கக் கோரி திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இன்னும் 1788 போலி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் வாக்குகளால் தேர்தல் முடிவுகள் மாற வாய்ப்புள்ளதால், அவர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டாதல் போலி வாக்களர்களை நீக்க முடியாது என்றும் பூத் முகவர்களுக்கு தரப்படும் வாக்காளர் பட்டியலை கொண்டு ஒருவர் இரண்டு முறை வாக்களிப்பதை தடுக்க முடியும்.
மனுதாரின் அனைத்து புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். தேர்தல் நியாமாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கையும் ஆணையம் மேற்கொள்ளும் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இம்மாதம் 21-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக போலி வாக்காளர்களை நீக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.