பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக சமீபத்தில் எடுக்கப்பட்டு ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.
உலகளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இதற்காக, ட்விட்டரில் 'மீ டூ' என்ற தலைப்பின் கீழ் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பகிர தளம் அமைக்கப்பட்டது. இதில், சினிமா பிரபலங்கள் உள்பட ஏராளமான பெண்கள் பங்கேற்று தங்களின் கருத்துகளை தெரிவித்து வந்னர். இந்த பிரச்சாரம் வைரலாகியது.
இந்நிலையில், பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் குறித்து உலகளாவிய வல்லுநர்கள் கொண்ட குழு ஒன்று இதுதொடர்பாக கருத்துக்கணிப்பு நடத்தயது. இந்த கருத்து கணிப்பின் மூலம் அதிர்ச்சி ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது. அதாவது, உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் இரண்டாம் இடத்திலும், சிரியாவும் அமெரிக்காவும் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காததே இந்த ஆய்வு முடிவின் காரணமாக கருதப்படுகிறது.