சம்பளம் பாக்கி தரவில்லை: டிரம்ப் மீது கார் ஓட்டுனர் புகார்

Jul 10, 2018, 17:05 PM IST

தனது கூடுதல் நேர பணிக்கான சம்பளத்தை வழங்கவில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது அவரது கார் ஓட்டுனர் புகார் அளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கார் ஓட்டுனராக பணி புரிந்தவர் நோயல் சின்ட்ரன். இவர், கடந்த 25 ஆண்டுகளாக ட்ரம்பின் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.
நோயல் ட்ரம்பிற்கு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினர், வர்த்தக நிறுவன அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக டிரம்ப் மற்றும் அவரது நிறுவனத்திற்காக 3,300 மணி நேரம் ஓவர் டைமில் பணிபுரிந்து இருக்கிறேன். ஆனால், அதற்கான சம்பவளத்தை ட்ரம்ப் வழங்கவில்லை என்றும், மணிக்கு ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 20 லட்சம் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என நோயல் ட்ரம்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆனால், நோயலின் குற்றச்சாட்டை ட்ரம்ப் நிறுவனம் மறுத்துள்ளது. நோயலுக்கு வழங்கவேண்டிய சம்பளம் பாக்கிஇல்லாமல் அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டது. இதன் மீறி தொடர்ந்துள்ள புகாரை நீதிமன்றத்தில் சந்திப்போம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

You'r reading சம்பளம் பாக்கி தரவில்லை: டிரம்ப் மீது கார் ஓட்டுனர் புகார் Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை