சொத்து வரியில் 50 சதவீதம் குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

Jul 26, 2018, 19:06 PM IST

வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரியை 50 சதவீதமாக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு நீண்ட ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சொத்து வரியை 100 சதவீதம் உயர்த்தி சமீபத்தில் அரசாணை பிறப்பித்தது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல தரப்ப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. இந்த புதிய சொத்து வரி மூலம் 1160 கோடி ரூபாய் கிடைக்கும் எனவும் தமிழக அரசு எதிர்பார்த்தது.

இந்நிலையில், சொத்து வரி உயர்வு குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், வாடகை குடியிருப்புகளுக்கு விதிக்கப்பட்ட 100 சதவீத வரியை 50 சதவீதமாக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உரிமையாளர் குடியிருப்பு மற்றும் வாடகைத்தாரர் குடியிருப்பு என இரண்டுக்கும் ஒரே வரிவீதம் இருக்கும்.

மேலும், சொத்து வரி சீராய்வு 2018&2019ம் ஆண்டின் முதலாண் அரையாண்டு முதலே நடைமுறைக்கு வரும் எனவும் புதிய வரி விகிதத்தின்படி முன் தேதியிட்டு வரி செலுத்த தேவையில்லை எனவும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

You'r reading சொத்து வரியில் 50 சதவீதம் குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை