அந்த விஷயம் செய்தவனை சுட்ட அமெரிக்க பாட்டி

அமெரிக்காவில் வீட்டின் முன்பு தவறான செய்கையுடன் வந்தவனை பாட்டி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

Gun

அமெரிக்கா ஹூஸ்டனில் வசிப்பவர் ஜீன் என்ற பாட்டி. அவருக்கு வயது 68. சில தினங்களுக்கு முன்னர் மாலை 5:15 மணிக்கு, ஜீன் குப்பை கொட்டுவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.

அப்போது அங்கு தவறான செய்கையுடன் ஒருவன் சைக்கிளில் வந்திருக்கிறான். அவனை பார்த்ததும், ஜீன் தன் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். ஆனால், அவன் அவரை தொடர்ந்து வந்திருக்கிறான்.

“இங்கேயிருந்து போய் விடு இல்லாவிட்டால் சுட்டுவிடுவேன்” என்று அந்த மூதாட்டி அவனை எச்சரித்துள்ளார். ஆனாலும், அவன் தவறான பாலியல் செய்கையுடன் வீட்டின் முன்பு வந்துள்ளான். வீட்டினுள் ஜீன் பாட்டியின் 14 வயது பேத்தி இருந்துள்ளாள்.

ஆகவே, ஜீன் தான் கூறியபடியே வீட்டினுள் சென்று, கைத்துப்பாக்கியை எடுத்து வந்து அவனை நோக்கி சுட்டுள்ளார். அவனது மார்பில் தோள்பட்டையின் அருகில் குண்டு பாய்ந்துள்ளது.

குண்டு பாய்ந்ததும் தடுமாறிய அவன், சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓட்ட முயன்றுள்ளான். ஆனால், வழியிலேயே விழுந்து விட்டான். மருத்துவ பணியாளர்கள் விரைந்து வந்து அவனை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளார்கள்.

சம்பவத்தில் காயம்பட்ட நபர், ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு தெருக்களில் நிர்வாணமாக ஓடியதற்காக காவல்துறையில் பிடிபட்டுள்ளான் என்று ஹூஸ்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

READ MORE ABOUT :