அவையில் இருக்க நான் தகுதியிழந்து விட்டேன்!-. மாயவாதி

Mayawati quits Rajya Sabha after being disallowed to speak on Dalit atrocities

Jul 18, 2017, 20:00 PM IST

ன் மக்களுக்காக பேச எனக்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில், தான் இந்த அவையில் இருக்க தகுதி இழந்து விட்டதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

மாயாவதி ராஜினாமா

உத்தரபிரதேச மாநிலம் ஷரன்பூரில் தலித் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்து மாயவாதி மாநிலங்களவையில் பேசிக் கொண்டிருந்தார். கொடுக்கப்பட்ட 3 நிமிடங்களுக்கு மேல், அவர் பேசியதால், துணை அவைத் தலைவர் குரியன், கூடுதல் நேரம் ஒதுக்க மறுத்தார்.

மேலும், மாயவாதியை பார்த்து, 'அவையில் ஆதிக்கம் செலுத்த முயலாதீர்கள் ' என்றார் இதனால், கோபமடைந்த மாயாவதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். துணை அவைத் தலைவர், குரியன் தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து மாயாவதியை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், மாயாவதி அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

மாயாவதி கூறுகையில், ஷரன்பூரில் தலித் மக்களுக்கு எதிரான அத்துனை வன்முறைகள் நிகழ்த்துள்ளன. ஆளும் தரப்பு எனக்கு பேச அனுமதி தர மறுக்கிறது. நாட்டின் நொடிந்த மக்களுக்காக நான் பேசுகிறேன். நொடிந்த மக்களுக்காக பேசுவதை தடுப்பது வெட்கேக் கேடானது என்றார்.

 

You'r reading அவையில் இருக்க நான் தகுதியிழந்து விட்டேன்!-. மாயவாதி Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை