அமெரிக்காவில் ஆச்சர்யம்: குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த திருநங்கை

Feb 16, 2018, 16:21 PM IST

நியூயார்க்: ஆபரேஷன் எதுவும் செய்யாமலே, புதிய சிகிச்சை முறையால் குழந்தைக்கு திருநங்கை தாய்ப்பால் கொடுத்த சம்பவம் அனைவரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த திருநங்கை ஒருவர் குழந்தை வளர்க்க ஆசைப்பட்டார். அதனால், வாடகைத் தாய் மூலம் குழந்தை ஒன்றை பெற்றெடுக்க திருநங்கை முடிவு செய்தார். இதனால், டாக்கடரின் அறிவுரையின்படி வாடகைத் தாயின் மூலம் அவர் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால், முன்னதாகவே குழந்தை பிறந்த பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் வழங்க மாட்டேன் என வாடகைத் தாய் கூறியுள்ளார்.

இதனால், தானே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க திருநங்கை முடிவு செய்தார். இதற்காக, அமெரிக்காவில் உள்ள மவுன்ட் சினாய் பார் டிரான்ஸ் ஜென்டர் மருத்துவமனையில் இதற்காக அனுகினார். திருநங்கையால் குழந்தையையே பெற்றடுக்க சாத்தியமில்லாத நிலையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியுமா என்ற கேள்வி தான் அனைவரிடமும் எழுந்தது.

ஆனால், இந்த கேள்வியை முறியடித்துள்ளனர் அமெரிக்க டாக்டர்கள். ஆம். இதற்காக திருநங்கைக்கு அறுவை சிகிச்சை ஏதும் செய்யப்படவில்லை. ஹார்மோனை மாற்றக்கூடிய மருத்துவ முறைகள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தை பிறப்பதற்கு 5 மாதங்களுக்கு முன்பே இந்த புதிய மருத்துவ முறையின் மூலம் பால் சுரப்பதற்கான சிகிச்சைகள் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், வாடகைத் தாய் குழந்தையை பெற்றடுத்த பிறகு திருநங்கை ஒரு நாளுக்கு 8 அவுன்ஸ் அளவிற்கு தாய்ப்பால் உற்பத்தி செய்து குழந்தைக்கு பால் கொடுத்து வருகிறார். இதுபோல் இவரால் அடுத்த 6 மாதங்களுக்கு பால் கொடுக்க முடியும் என்றும் அதன் பிறகு, சரியான உணவு முறைகள் மூலம் பால் சுரக்க வழிவகை செய்யலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், அறுவை சிகிச்சை ஏதுமின்றி, குழந்தைக்கு திருநங்கையால் தாய்ப்பால் கொடுக்கும் சிகிச்சையை மேற்கொண்டு அமெரிக்க டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். மேலும், உலகிலேயே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

You'r reading அமெரிக்காவில் ஆச்சர்யம்: குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த திருநங்கை Originally posted on The Subeditor Tamil

More Aval News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை