குளு குளு தக்காளி முகத்தை பொலிவு செய்யுமா??

benefits of tomato at face

by Logeswari, Sep 2, 2020, 16:38 PM IST

தக்காளி சமையலுக்கு மட்டும் பயன்படாமல் சருமத்தையும் அழகு செய்யவும் பயன்படுகிறது.இவற்றில் வைட்டமின் ஏ,சி, மற்றும் கே போன்ற வைட்டமின்கள் அதிகமாக உள்ளதால் முகத்தை பொலிவு அடைய சில மாயங்களை நடத்துகிறது.தக்காளியில் உள்ள அமிலத்தால் முகத்தில் உள்ள அழுக்கை போக்கி புதிய ஆரோக்கியமான செல்களை உருவாக்குகிறது மற்றும் முகப்பருக்களை முழுவதுமாக அகற்றுகிறது.சரி வாங்க எப்படி தக்காளியை பயன்படுத்தி முகத்தை பொலிவு அடைய செய்வது பற்றி பார்ப்போம்.

பருக்களை நீக்க:-

சில பெண்களின் அழகை கெடுக்கும் வகையில் முகத்தில் பருக்கள் பிறந்திருக்கும்.இதனால் முகத்தை வெளியே காட்ட கூச்சபடுவார்கள்.இதனை போக்க ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு,1 ஸ்பூன் அரைத்த தக்காளி சாறு,2-3 ஸ்பூன் ஓட்ஸ் பொடி கலந்து முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊறவைக்கவும்.பின்பு குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.

கரும்புள்ளிகள் நீங்க:-

தக்காளியை சர்க்கரையில் தொட்டு முகத்தில் மென்மையாக தேய்க்க வேண்டும்.இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள அழுக்கு முழுவதும் நீங்கி கருப்புள்ளிகள் முகத்தை நெருங்காது.இதனை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துவது சருமத்திற்கு நல்லது.

முகத்தை பொலிவு செய்ய:-

கலை இழந்த முகத்தை மீண்டும் பொலிவு செய்ய 2 ஸ்பூன் தக்காளி சாறு,1 ஸ்பூன் தயிர் இரண்டையும் நன்கு கலக்கவும்.பிறகு முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைக்கவும்.பின்பு குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும்.இதை வாரத்தில் 3 முறை செய்து வந்தால் முகம் பொலிவாகவும் மென்மையாகவும் விளங்கும்….

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Aval News

அதிகம் படித்தவை