முகம் வெண்மையில் ஜொலிக்க மாதுளை ஃபேஸ் பேக் யூஸ் பண்ணுங்க!! பருக்களுக்கு உடனடி தீர்வு..

benefits of pomegranate face mask

by Logeswari, Oct 15, 2020, 19:53 PM IST

முகம் வெண்மையாக இருக்க வேணும்.. சுத்தமாக இருக்க வேண்டும் என்பதே பலரின் கனவு.கண்ணாடியில் பார்க்கும் பொழுது எந்த வித பருக்கள், கரும்புள்ளிகள் என எதுவுமே இருக்க கூடாது என்று நினைக்கின்ற அனைவருக்கும் மாதுளை ஃபேஸ் பேக் தான் ஒரே தீர்வு. இது எல்லா வகையான சருமத்திற்கும் பொருந்தும்.. அது மட்டும் இல்லாமல் உடனடி தீர்வை கண்குளிராக காணலாம். மாதுளை பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால் முகம் வெண்மை அடையும் என்று கேள்வி பட்டு இருப்பீர்கள். இது முற்றிலும் உண்மை தான்..அதை விட உடனடி தீர்வு காண மாதுளை ஃபேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்.

தேவையான பொருள்கள்:-
மாதுளை தோல் பொடி-தேவையான அளவு
கடலை மாவு - 2 ஸ்பூன்
காய்ச்சாத பால் - 1 ஸ்பூன்

செய்முறை:-
முதலில் மாதுளை தோலை வெயிலில் காய வைத்து எடுத்து கொள்ளவும்.காய வைத்த தோலை மிக்சியில் பொடியாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பௌலில் தேவையான மாதுளை தோலின் பொடி மற்றும் கடலை மாவை சேர்த்து கொள்ளவும்.பிறகு அதில் பச்சை பாலை ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை முகத்தில் தேய்த்து 15-20 நிமிடம் ஊற வைக்கவும்.20 நிமிடம் கழித்த பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகம் பொலிவு பெரும்.

கரும் புள்ளிகள்,பருக்கள் இருந்த இடமே தெரியாமல் மறைந்து விடும்.அது மட்டும் இல்லாமல் முகத்தில் இறந்த செல்களை வேரோடு அழித்து முகம் வெண்மை பெரும்..

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Aval News

அதிகம் படித்தவை