பெண்களின் ஹார்மோன்களை சமச்சீராக பராமரிக்கும்... வயிற்றுக்கு ஆரோக்கியம் அளிக்கும்

Advertisement

கருணைக்கிழங்கு சில பகுதிகளில் சேனைக்கிழங்கு என்று அழைக்கப்படுகிறது. குழப்பத்தை தவிர்க்க ஆங்கில பெயரான Elephant Foot Yam என்று புரிந்துகொள்ளலாம். 100 கிராம் சேனைக்கிழங்கில் (கருணை) 118 கலோரி இருக்கிறது. கார்போஹைடிரேடு 25 கிராமும், கொழுப்பு 1.5 கிராமும் உள்ளது. புரதம் (புரோட்டீன்) 9.81 கிராம், உண்ணக்சுடிய நார்ச்சத்து 5.7 கிராம், பொட்டாசியம் 1208 மில்லி கிராம், கால்சியம் (சுண்ணாம்புச் சத்து) 20 மில்லி கிராம், இரும்புச் சத்து 1.8 மில்லி கிராம், மெக்னீசியம் 82 மில்லி கிராம், சோடியம் 14.2 மில்லி கிராம், துத்தநாகம் (ஸிங்க்) 2 மில்லி கிராம், தாமிரம் (செம்பு) 0.3 மில்லி கிராம் உள்ளது.

நீரிழிவு
கிளைசெமிக் இன்டெக்ஸ் என்னும் சர்க்கரை ஊட்ட குறியீடு இதற்கு குறைவு. அதாவது இக்கிழங்கை சாப்பிடுவதால் இரத்த சர்க்கரையின் அளவு உடனடியாக உயராது. இதில் கார்போஹைடிரேட்டின் அளவு குறைவு என்பதோடு, ஓரளவு நார்ச்சத்து இருப்பதால், இதை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் குளூக்கோஸ் மெதுவாகவே சேரும். நீரிழிவுக்கு எதிரான இயல்புகள் சேனைக்கிழங்குக்கு இருப்பதாக ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் நீரிழிவை கட்டுக்குள் வைக்க முடியும்.

மாதவிடாய்
சேனைக்கிழங்கு (கருணை) பெண்களில் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோனின் அளவை சரியான அளவில் பராமரிக்கிறது. மாதவிடாய் நாள்களில் வயிற்றில் ஏற்படும் பிடிப்பு போன்ற அசிரத்தைகளை இது குறைக்கிறது. பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்னையை இது தீர்க்கிறது. மாதவிடாய் நிற்கக்கூடிய மெனோபாஸ் பருவ பெண்கள் இந்தக் கிழங்கை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை அதிகப்படுத்தி தொல்லைகளை குறைக்கிறது.இதில் இருக்கும் வைட்டமின் பி6 பெண்களுக்கு நலம் பயக்கும்.

இரத்தக் கொதிப்பு
உயர் இரத்த அழுத்தம் பொதுவாக பலரது உடல் ஆரோக்கியத்தை கெடுக்கக்கூடியதாக உள்ளது. சேனைக்கிழங்கில் (கருணை) அதிக அளவு பொட்டாசியம் தாது உள்ளது. 100 கிராம் கிழங்கு சாப்பிட்டால் உடலுக்கு ஒரு நாளுக்குத் தேவையானதில் 30% பொட்டாசியம் கிடைக்கும். பொட்டாசியம் உடலில் சேர்ந்தால், மருந்து இல்லாமல் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம். பெருஞ்சீரகம் (சோம்பு), மல்லி (தனியா) இவற்றை அரைத்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும், கருணை கிழங்கை வேகவைத்து மசிக்கவும் அதில் ஒரு மேசை கரண்டி அளவு எடுத்து தண்ணீர் சேர்த்து அதனுடன் அரைத்து வைத்த பெருஞ்சீரக மல்லி பொடியை சேர்க்கவும். சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர கொழுப்பு கரையும். உயர் ரத்த அழுத்தம் குறையும்.

மலச்சிக்கல்
சேனைக்கிழங்கு (கருணை) குடலுக்கு நன்மை செய்யக்கூடியது. இது செரிமானத்தை தூண்டி, மலச்சிக்கலை தீர்க்கிறது. தொடர் வயிற்றுப்போக்கை குணமாக்கும். இக்கிழங்கை வேகவைத்து மசித்து ஒரு மேசை கரண்டு அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அதே கரண்டி அளவில் இருமடங்கு தயிர் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர குடற்புண் குணமாகும்.

மூல நோய்
உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை காக்க வல்லது சேனைக்கிழங்கு (கருணை) ஆகும். மூலநோயால் பாதிப்புற்றவர்கள் சேனைக்கிழங்கை (கருணை) தொடர்ந்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.

சேனைக்கிழங்கினை (கருணை) சாதாரணமாக சமைத்து சாப்பிட்டால், நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். நன்றாக வேக வைத்து பின், தோலை உரித்து, புளி சேர்த்து சமைத்தால், கிழங்கிலுள்ள காரல் நீங்கும். அரிப்பு இருக்காது. சிலர் அரிசி கழுவிய நீரில், கருணைக்கிழங்கை வேக வைப்பதுண்டு. இது கல்லீரலுக்கு ஆரோக்கியம் அளிக்கும். உடல் எடையை குறைக்க உதவும். முடக்குவாதம் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டால் குணம் தெரியும். இது உடலை குளிரச் செய்யும் உணவு என்பதால் ஆஸ்துமா தொல்லை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-do-facial-at-home
பெண்களின் அழகை மேம்படுத்த சில டிப்ஸ்.. இதை செய்தால் முகம் ஜொலிக்குமாம்..!
what-are-the-secrets-of-beauty
அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது?? நீங்களே சொல்லுங்கள்
what-are-the-benefits-of-using-honey
தேனில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் என்ன??
secret-of-kerala-girls
கேரளா பெண்களின் அழகு சீக்ரெட்.. இதை செய்தால் முகம் பளபளப்பாக இருக்குமாம்..
how-to-sleep-at-menstrual-cycle-time
எப்படி தூங்கினால் வலி இருக்காது தெரியுமா?? மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உதவும் சில டிப்ஸ்..
how-to-cure-hair-loss
முடி உதிர்வை தடுக்க ஒரு இன்ஸ்டன்ட் டிப்ஸ்.. இப்படி செஞ்சு பாருங்க அசந்துடுவிங்க..!
how-to-loss-weight-after-delivery
பெண்கள் குழந்தை பெற்ற பிறகு குண்டாக காரணம் என்ன?? மீண்டும் பழைய நிலைக்கு மாறுவது எவ்வாறு??
how-to-choose-lipstick
லிப்ஸ்டிக்கை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?? வாங்க பார்க்கலாம்..
how-to-cure-wrinkles-with-orange-face-mask
முகம் 20 வயது போல மின்ன வேண்டுமா.. ஆரஞ்சு பவுடர் தான் பெஸ்ட்.. ஆண்களும் பயன்படுத்தலாம்..
how-to-escape-from-stomach-pain
பெண்கள் கார்னர்.. வயிற்று வலியில் இருந்து தப்பிக்க வேண்டுமா?? அப்போ இதை செய்யுங்கள்..

READ MORE ABOUT :

/body>