நீங்கள் முடிக்கு கண்டிஷனர் பயன்படுத்துபவரா..? அப்போ முதலில் இதை கவனியுங்கள்..

குளியல் என்பது அவசியமான ஒன்று. பண்டைய காலத்தில் தலைக்கு எண்ணெய் வைத்து சிகைக்காய் தேய்த்து குளித்தார்கள். நாம் இப்பொது ஷாம்பூ உபயோகிறோம். தலைக்கு ஷாம்பு போட்டு குளித்ததும், கண்டிஷனர் பயன்படுத்துகிறோம். ஆனால் அதை ஏன் போட வேண்டும்? எப்படி போட வேண்டும் என பலருக்கு தெரிவதில்லை. கண்டிஷனர் கூந்தலுக்கு ஈரப்பதம் அளித்து பலம் அளித்தாலும், அதனை தவறாக உபயோகபப்டுத்தும்போது கூந்தல் சேதமடைகிறது. அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

உங்கள் ஸ்கால்ப்பில் உயிரோட்டம் இருப்பதால், அங்கே கண்டிஷனர் தேவையில்லை. இயற்கை எண்ணெய் சுரப்பதால் வேர்கால்களை, நமது சருமம் பாதுகாத்துக் கொள்ளும். ஆனால் அங்கே கண்டிஷனர் போடும்போது கூந்தல் பலமிழந்து, உதிர துவங்குகிறது.

மிகக் குறைந்த அளவே கண்டிஷனர் போதுமானது. ஆனால் அதிகமாக உபயோகபடுத்தும்போது, அதிலிருக்கும் அதிகப்படியான இரசாயனங்களால் உங்கள் முடியை, நீங்கள் இழக்க வேண்டியது வரும்.

உங்களுக்கு கூந்தல் நல்ல நிலையில் இருந்தாலும், ஷாம்பு உபயோகிக்கும்போதெல்லாம் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் ஷாம்பு உங்கள் கூந்தலில் அதிக வறட்சியை ஏற்படுத்தி பலமிழக்கச் செய்யும். ஆகவே ஷாம்பு பயோகிக்கும்போதெல்லாம் கண்டிஷனர் உபயோகித்தால் முடி உதிர்வை தவிர்க்கலாம்.

உங்கள் கூந்தலுக்கு கட்டாயம் ஆழ்ந்த கண்டிஷனர் தரப்பட வேண்டும். இதனால் கூந்தல் வறட்சி, முடி உடைதல் ஆகியவற்றை தவிர்க்கலாம். ஆலிவ் எண்ணெய் மற்றும் முட்டை ஆகியவை கலந்து செய்த கண்டிஷனர், உங்கள் கூந்தலுக்கு வலுவூட்டும்.

ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கலந்து கடைகளில் கிடைக்கும் ஷாம்புக்கள் உங்கள் கூந்தலுக்கு பலம் தராது. ஏனென்றால் கூந்தலின் நுனிக்கு கண்டிஷனர் அதிகம் தேவை. எனவே இது போன்ற ஷாம்புக்களில் இருக்கும் கண்டிஷனர் பயன் தராது.

கண்டிஷனர் பயன்படுத்தி அதிக நேரம் அப்படியே விடக் கூடாது. அதிகபட்சம் 2 நிமிடங்கள் இருந்தால் போதுமானது. இது அதிக நேரம் இருந்தால் முடி உதிர்வு வழிவகுக்கும்.

நாம் அனைவரும் ஷாம்பு பயன்படுத்தி பின்னர் கண்டிஷனர் பயன்படுத்துகிறோம். ஆனால் உண்மையில் கண்டிஷனர் பயன்படுத்தி சில நிமிடங்களில் தலையை அலசி, அதன்பின் ஷாம்புவை போடவேண்டும்.. அதாவது கண்டிஷனரை கழுவத்தான் ஷாம்புவை பயன்படுத்த வெண்டும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-do-facial-at-home
பெண்களின் அழகை மேம்படுத்த சில டிப்ஸ்.. இதை செய்தால் முகம் ஜொலிக்குமாம்..!
what-are-the-secrets-of-beauty
அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது?? நீங்களே சொல்லுங்கள்
what-are-the-benefits-of-using-honey
தேனில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் என்ன??
secret-of-kerala-girls
கேரளா பெண்களின் அழகு சீக்ரெட்.. இதை செய்தால் முகம் பளபளப்பாக இருக்குமாம்..
how-to-sleep-at-menstrual-cycle-time
எப்படி தூங்கினால் வலி இருக்காது தெரியுமா?? மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உதவும் சில டிப்ஸ்..
how-to-cure-hair-loss
முடி உதிர்வை தடுக்க ஒரு இன்ஸ்டன்ட் டிப்ஸ்.. இப்படி செஞ்சு பாருங்க அசந்துடுவிங்க..!
how-to-loss-weight-after-delivery
பெண்கள் குழந்தை பெற்ற பிறகு குண்டாக காரணம் என்ன?? மீண்டும் பழைய நிலைக்கு மாறுவது எவ்வாறு??
how-to-choose-lipstick
லிப்ஸ்டிக்கை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?? வாங்க பார்க்கலாம்..
how-to-cure-wrinkles-with-orange-face-mask
முகம் 20 வயது போல மின்ன வேண்டுமா.. ஆரஞ்சு பவுடர் தான் பெஸ்ட்.. ஆண்களும் பயன்படுத்தலாம்..
how-to-escape-from-stomach-pain
பெண்கள் கார்னர்.. வயிற்று வலியில் இருந்து தப்பிக்க வேண்டுமா?? அப்போ இதை செய்யுங்கள்..
Tag Clouds