கமலின் பிக்பாஸ் 4ல் கும்கி நடிகை? கோலிவுட்டில் புது வாழ்வு கிடைக்குமா?

Actresss Lakshmi Menan will paraticipate in Big Boss4 Show

by Chandru, Sep 13, 2020, 09:53 AM IST

பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தில் அறிமுகமானார் லட்சுமி மேனன். விக்ரம் பிரபுவும் இந்த படத்தில்தான் அறிமுகமானார். லட்சுமி மேனனுக்கு கும்கி படத்தில் நடித்துக்கொண்டிருந்த போதே சுந்தர பாண்டியன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை ஏற்று நடித்தார். இப்படம்தான் அவருக்கு முதல் படமாக வெளியானது. அடுத்து கும்கி வெளியானது. இரண்டு படமும் ஹிட்டானது. தொடர்ச்சியாக லட்சுமி மேனனுக்கு படங்கள் வந்த நிலையில் திடீரென்று அவரது மார்க்கெட் சரிந்தது. அதில் அப்செட் ஆனவர் மேற்கொண்டு படிக்கபோகிறேன் என்று கேரளா திரும்பினார். கடைசியாக 2016ம் ஆண்டு றெக்க படத்தில் நடித்தார். பிறகு 3 வருடம் படம் எதுவும் இல்லாமல் இருந்தார். இந்த ஆண்டில் சிப்பாய், ய்ங் மங் சங் என 2 படங்கள் கைவசம் இருக்கிறது. அப்படங்கள் எப்போது வரும் என்று தெரியவில்லை.


இந்நிலையில்தான் லட்சுமி மேனன் பெயர் கமலின் பிக் பாஸ் 4ல் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. படங்கள் எதுவும் பெரிதாக உள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றால் ஏதாவது ஒரு திருப்பம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் சிறு சிறு வேடங்களில் நடித்தவரும் ஷாலு ஷம்மு தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி படங்களையும், பாய்பிரண்டுட்டன் நடனம் ஆடும் படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அவரும் பிக்பாஸ்4ல் பங்கேற்ற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதே போல் சில தினங்களுக்கு முன்பு பிகில் நடிகை அம்ரிதா ஐயர் பெயரும் இதில் அடிபட்டது.


இதற்கிடையில் பிக்பாஸ் 4 பற்றி விஜய் டிவியின் அறிக்கை ஒன்று வேகமாக பரவி வருகிறது. 'பிக்பாஸ் சீசன் - 4ன் அறிவிப்பு வெளியான இரண்டே நாட்களில், 40 லட்சம் பார்வையாளர்களை கடந்தது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற 3 ஷோக்களை காட்டிலும் 4வது ஷோவை பெரிய ஹிட் ஆக்குவதில் கமல் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். வார்த்தைகளால் பேசிக்கொண்டிருந்தவர் இம்முறை நடனம் ஆடி புரமோஷன் வீடியோ வெளியிட்டார். ஷோவை காரசாரமாக்க 'தப்புனா தட்டிக் கேட்பேன், நல்லதுன்னா தட்டிக் கொடுப்பேன்' என்று போடியாளர்களுக்கு அட்வைஸ் செய்வது போல் அரசியல் வாதிகளுக்கும் எச்சரிக்கை விட்டு ஷோவில் அரசியலும் அனல் பறக்கும் என்பதை கோடிட்டு காட்டி இருக்கிறார்.
முன்னதாக அவர் பிக்பாஸ்1ல் 'ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது' என்றார் 2வது சீசனில், 'நல்லவர் யார், கெட்டவர் யார்' என்றா, 3வது சீசனில், 'இது வெறும் ஷோ அல்ல, நம்ம லைப்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை