பீகாரில் 3 திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு.. பிரதமர் மோடி பங்கேற்பு..

by எஸ். எம். கணபதி, Sep 13, 2020, 09:24 AM IST

பீகாரில் சமையல் எரிவாயு நிரப்பும் 2 மையங்கள் மற்றும் எரிவாயு எடுத்து செல்லும் பைப்லைன் திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பீகாரில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை வேகமாக முடித்து வருகின்றனர். பாரதீப்-ஹால்டியா-துர்காபூர் இடையே 679 கி.மீ. தூரத்திற்கு எரிவாயு எடுத்து செல்வதற்கான குழாய் பதிக்கும் திட்டம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இதில், துர்காபூர்-பங்கா இடையே பணிகள் முடிந்துள்ளது. பங்காவில் ஐ.ஓ.சி. சார்பில் சிலிண்டர்களில் சமையல் எரிவாயு நிரப்பும் மையம், ஹர்சிதியில் இந்துஸ்தான் பெட்ரோலியத்தின் சமையல் எரிவாயு நிரப்பும் மையம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இதற்கான விழா, காணொலி வழியாக நடத்தப்படுகிறது. அதில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் அமைச்சர்கள், பெட்ரோலியத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.


More India News