அமித்ஷாவுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு..எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி..

by எஸ். எம். கணபதி, Sep 13, 2020, 09:17 AM IST

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடந்த மாதம் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஆக.2ம் தேதி அவர் குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு குணம் அடைந்த அவர், டாக்டர்களின் ஆலோசனைப்படி மேலும் சில நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டார். கடந்த ஆக.31ம் தேதி அவர் குணமாகி வீடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு(செப்.12) அமித்ஷாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நாளை நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அமித்ஷா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது பாஜகவினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.


More India News

அதிகம் படித்தவை