நடிகை ஸ்ருதி ஹாசன் 2 வருட இடைவெளிக்கு பிறகு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார். எஸ்பி.ஜன நாதன் இயக்கும் லாபம் படத்தில் விஜய்சேதுபதியுடன் நடிக்கிறார்.
தந்தை கமலைப்போல் ஸ்ருதிஹாசன் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள் வதில் ஆர்வம் கொண்டவர் . தவறாமல் உடற்பயிற்சி செய்து வருவதுடன் அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அவரது இந்த பகிர்வுகள் மற்றவர்களையும் உடலை ஃபிட்டாக வைக்க தூண்டி வருகிறது.
சமீபத்தில் சில சண்டை பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை வெளியிட்ட ஸ்ருதிஹாசன், "சண்டை !!!! சண்டை பயிற்சி. எனது மைய சக்தியாக இருக்கிறது. எனக்கு மனத் தெளிவு மற்றும் வலிமை தருவதுடன் உடல் ரீதியான பின்னடைவு வேறு எதையும் எதிர் கொள்ளாமல் இருக்கிறது. மன ரீதியான சக்தி பலமடைகிறது என்றார்.
அவரது தீவிர சண்டை பயிற்சியின் வீடியோவைப் பார்த்து, அவர் மேற் கொண்டு வரும் முயற்சியை பலரும் பாராட்டினர். நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் சித்தாந்த் கபூர் போன்ற நடிகர்கள் ஸ்ருதிக்கு வாழ்த்து பகிர்ந்தனர்.
ஸ்ருதி முன்னதாக தனது அமெரிக்க தொடரான ட்ரெட்ஸ்டோனுக்காக ஸ்டண்ட் பயிற்சி பெற்றார். அப்போது அவர், "நான் எப்போதுமே உடல் ரீதியான பயிற்சி முறைகளை செய்ய விரும்புகிறேன். சண்டை காட்சிகளில் எப்போதுமே நானே ஒரிஜனலாக செய்து வருகிறேன்." ஆம், இதை நிறுத்த போவதில்லை என்றார்.