விஜய் பட இயக்குனர் படத்தில் பிரபல பாலிவுட் ஹீரோ, ஹீரோயின் ஜோடி.. ஜேம்ஸ்பாண்ட் பாணி படம் பற்றிய புது அப்டேட்..
Atlees Bollywood debut with Shah Rukh Khan Deepika Padukone
விஜய் நடித்த பிகில் படத்தை இயக்கிய அட்லீ பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. கடந்த ஆண்டு மும்பை சென்று ஷாருக்கானை அட்லீ சந்தித்தார். ஆனால் அது சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை. அட்லீ சொன்ன ஸ்கிரிப்ட்டில் திருப்தி இல்லாமல் புதிய ஸ்கிரிப்ட் கேட்டார். இதையடுத்து புதிய ஸ்கிரிப்ட் தயாரித்துக்கொண்டு மீண்டும் ஷாருக்கை சந்தித்து கதை சொன்னார். அதிரடி ஆக்ஷன் நிறைந்த துப்பறியும் அதிகாரியின் கதையாக அது இருந்தது. அதற்கு ஷாருக் ஒகே சொன்னார். இதையடுத்து படத்தின் அடுத்த கட்ட பணிகளை தொடங்கினார் அட்லீ. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
ஜேம்ஸ்பாண்ட் பாணி படம்போல் இது உருவாக இருப்பதால் ஹீரோயினையும் அதற்கு ஏற்ப தேடினார் அட்லீ. ஹீரோயினும் இதில் ஆக்ஷன் காட்சியில் நடிக்க வேண்டிருக்கும் என்று தெரிதிறது. நடிப்பிலும் ஆக்ஷன் காட்சியிலும் ஃபிட்டாக இருக்கும் தீபிகா படுகோனை அணுகி கதை சொன்னார். அவருக்கும் பிடிக்கவே நடிக்க ஒப்புக் கொண்டார். இப்படத்துக்கு சங்கி என பெயரிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.
முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி அன்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த சிஎஸ்கே Vs கே.கே.ஆர் போட்டியின் போது அட்லீ மற்றும் ஷாருக் சந்திப்பு நடந்தது. ஷாருக்கிற்கு பிகில் பட டிரெய்லரை அவருக்கு அட்லீ காட்டி பாராட்டு பெற்றார். அப்போதே இருவரும் இணைந்து ஒரு படம் செய்யலாம் என்று பேசினர்.
தற்போது அந்த திட்டம் கைகூடி இருக்கிறது. ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ஹேப்பி நியூ இயர் படங்களுக்கு பிறகு நான்காவது முறையாக ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கிறார் தீபிகா படுகோன்.
ராஜ்குமார் ஹிரானி மற்றும் ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டி.கே இயக்கிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ஷாருக் அப்படங்களின் படப்பிடிப்பை முடித்துக்கொடுத்துவிட்டு 2021 ஆம் ஆண்டில் அட்லீ படத்தில் நடிக்கிறார் ஷாருக்.