தனியார் துறை வேலைக்கான அரசு இணையதளம் !

by Loganathan, Sep 13, 2020, 10:42 AM IST

தமிழக அரசு தனியார் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை , வேலை தேடும் இளைஞர்கள் இடையே கொண்டு சேர்க்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து ஒரு இணையதளத்தை தொடங்கியுள்ளது . இதன் மூலம் தனியார் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை , இளைஞர்கள் தெரிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளத்தின் மூலம் உற்பத்தி துறை ( Manufacturing sector ) , கட்டுமான துறை (Construction ) , மின்னணுவியல் ( Electronics ) , வன்பொருள் (Hardware ) , தகவல் தொழில்நுட்பவியல் ( IT ) , மருத்துவம் (Healthcare ) போன்ற துறைகளில் உள்ள தனியார் வேலைவாய்ப்புகளை இந்த இணையதளத்தின் மூலம் பெறலாம் .

பயனர் பதிவு
வேலை தேடும் இளைஞர்கள் இந்த இணையதளத்தில் தங்களுக்கான பயனர் பதிவை செய்ய வேண்டும்.

பெயர் , இ- மெயில் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து பயனர் பதிவை பெற வேண்டும். பின்னர் தங்களின் மொபைல் எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து உள் நுழையலாம்.

அதில் உங்களுக்கான வேலைதேடும் துறையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் . பின்னர் உங்களின் வேலை சார்ந்த அனுபவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

உங்களின் ரெசியூம் யை இந்த தளத்தில் அப்லோடு செய்தால் உங்களுக்கான வேலைவாய்ப்புகளை தேர்வு செய்து இணையதளத்தில் காட்டப்படும்.

மேலும் தெரிந்து கொள்ள
https://www.tnprivatejobs.tn.gov.in/Home


More Tamilnadu News

அதிகம் படித்தவை