போடோ ஷூட் நடத்தி ஹீரோயின் களுக்கு சவால் விட்ட வில்லன்கள்..

by Chandru, Sep 13, 2020, 11:01 AM IST

ஐஸ்வர்யாராய் தொடங்கி ஐஸ்வர்யா ராஜேஷ் வரை தங்களது லேட்டஸ்ட் தோற்றத்தை வெளிப்படுத்த போட்டோ ஷூட் நடத்தி அப்படங்களை நெட்டில் வெளியிடுகின்றனர். சில ஹூரோக்களும் போடோ ஷூட் நடத்துவதுண்டு கொரோனா ஊரடங்கில் இந்த விஷயத்தில் புதிய டிரெண்டு உருவாகி இருக்கிறது.


லாக் டவுன் போட்டோஷூட் மூலம் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், செண்ட்ராயன் , காமெடி நடிகர் மனோபாலா, டான்ஸ் மாஸ்டர் சாண்டி போன்றவர்கள் தங்களது வழக்கமான தோற்றத்திலிருந்து மாறி புதிய தோற்றத்தில் தங்கள் லேட்டஸ் புகைப்படங்களை பகிர்ந்தனர். இவர்களைபோல் சீனியர் வில்லன் நடிகர் நாசருக்கும் சமீபத்தில் இந்த ஆசை வர அவரும் லேட்டஸ்ட் காஸ்டியும் அணிந்து பெப்பர் சால்ட் தோற்றத்தில் ஒரு போட்டோஷூட் செய்து பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கொரோனா லாக்டவுனில் நாசர் போட்டோ ஹூட் நடத்தி தன்னைத்தானே புதுபித்துக்கொண்டு மிரள வைத்திருக்கிறார். அப்படங்கள் சமீபத்தில் நெட்டில் வெளியிடப்பட்டன, இது அவரை ஒரு ஸ்டைலான அவதாரத்தில் கண்முன் நிறுத்தி இருக்கிறது.


வெள்ளை கால்சட்டையுடன் ஒரு வெள்ளை டி ஷர்ட் அணிந்து ஸ்டைல் காட்டி போஸ் அளித்தார். நாசர் அடுத்து அக்னி சிறகுகள் படத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி, ஹரி சந்தோஷின் கல்லூரி குமார், சிறுத்தை சிவாவின் அண்ணாத்த, லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் ஆகிய படங்களில் நாசர் தற்போது நடிக்கிறார்.


நாசரைப் போலவே நடிகர் மன்சூர் அலிகான் போட்டோ ஷூட்டிற்காக புதிய தோற்றத்துக்கு மாறி இந்த பூனையும் பால் குடிக்குமா என்று காணப்படுகிறார்.


More Cinema News

அதிகம் படித்தவை