நடிகை மியா ஜார்ஜின் திருமண ஆடை ரெடியாக எத்தனை மணிநேரம் ஆனது தெரியுமா?

நேற்று எர்ணாகுளத்தில் நடந்த திருமணத்தில் பிரபல மலையாள நடிகை மியா ஜார்ஜ் அணிந்திருந்த ஆடையை தயாரிக்க 487 மணிநேரம் ஆனதாம்.
பிரபல மலையாள நடிகை மியா ஜார்ஜின் திருமணம் நேற்று எர்ணாகுளத்திலுள்ள செயின்ட் மேரீஸ் சர்ச்சில் நடந்தது. எர்ணாகுளத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்வின் பிலிப் தான் மணமகன். இது இரு வீட்டாரும் சேர்ந்து நிச்சயித்த திருமணம் ஆகும். கடந்த மே மாதமே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டது. கொரோனா காலம் என்பதால் நிச்சயதார்த்தம், திருமணம், வரவேற்பு உட்பட நிகழ்ச்சிகளில் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.


நேற்று திருமணத்தின் போது நடிகை மியா ஜார்ஜ் ஒரு கிளாசிக் வெட்டிங் கவுன் அணிந்திருந்தார். முழுக்க முழுக்க கை வேலைப்பாடுகளுடன் தயாரான இந்த வானிலா நிற லாங்க் கவுன் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. லேபல் எம் டிசைனர்ஸ் தான் இந்த திருமண ஆடையை உருவாக்கியிருந்தனர். இதை தயாரிக்க 487 மணிநேரம் ஆனதாம். 10 தொழிலாளர்கள் சேர்ந்து 487 மணிநேரம் சிரமப்பட்டு இந்த திருமண ஆடையை தயாரித்ததாக லேபல் எம் டிசைனர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருமணத்திற்கு முந்தைய நாள் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் மியா ஜார்ஜ் பட்டு சேலை அணிந்திருந்தார். திருமணத்தையொட்டி மியா ஜார்ஜ் அணிந்திருந்த உடைகள் அனைத்துமே புதிய டிசைன்கள் என்பதால் கேரளாவிலுள்ள சமூக இணையதளங்களில் இது குறித்துத் தான் விவாதிக்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு பிறகும் நடிப்பை கைவிடப் போவதில்லை என்று நடிகை மியா ஜார்ஜ் கூறியுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
Tag Clouds

READ MORE ABOUT :