கமலுக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்த நடிகை பிக்பாஸ் 4க்கு வருகிறார்..

by Chandru, Sep 23, 2020, 17:09 PM IST

கமலின் பிக்பாஸ் 4வது சீசன் வரும் அக்டோபர் 2ம் தேதி தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வருகிறது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வு ரகசியமாக நடப்பதுடன் பங்கேற்கச் சம்மதித்தவர்களுக்கு கொரோனா டெஸ்ட் சோதனை நடத்தப்பட்டுத் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.இம்முறை போட்டியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. வழக்கமாக 100 நாட்கள் நடக்கும் ஷோ இம்முறை 80 நாட்கள் மட்டுமே நடக்கிறது. 16 போட்டியாளர்களுக்கு பதில் 12 அல்லது 14 பேர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்கும் பிரபலங்களின் ஆதிகரப்பூரவமற்ற தகவல் வலைத்தளங்களில் வலம் வருகிறது. நடிகைகள் ஷனம் ஷெட்டி, கிரண், ஷிவானி, ரம்யா பாண்டியன், நடிகர்கள் கேப்ரில்லா, அனு மோகன், ஜித்தன் ரமேஷ், ரியோ ராஜ், சூப்பர் சிங்கர் அஜித்ம, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அர்ச்சனா ஆகியோர் பெயர்கள் வெளியாகி உள்ளன. இதைத் தொடர்ந்து கமலுக்கு லிப் டு லிப் முத்தம் தந்து நடித்த நடிகையும் இதில் பங்கேற்கத் தேர்வாகி உள்ளாராம். அவர் வேறு யாருமல்ல கடலோரக் கவிதைகள் நடிகை ரேகா. இவர் போட்டியில் பங்கேற்பதால் இவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டுத் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருக்கிறாராம்.

புன்னகை மன்னன் படத்தில் கமலுடன் ஜோடியாக நடித்தவர் ரேகா. இப்படத்தில் காட்சிப்படி இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு எழுவதால் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து நீர் வீழ்ச்சியின் உச்சிக்குச் செல்வார்கள் அங்கிருந்து குதிப்பதற்கு முன் கடைசியாகக் கமலும் ரேகாவும் லிப் டு லிப் முத்தம் தரும் காட்சி படத்தின் ஹைலைட்டாக அமைந்தது. அதெல்லாம் இளமை துள்ளலில் நடந்த விஷயமென்றாலும் பிக்பாஸ்4 கமலின் நிகழ்ச்சி அதில் ரேகா பங்கேற்பது இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கமலுடன் நடித்த மற்றொரு ஹீரோயினும் இந்நிகழ்சியில் இடம் பெற்றிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல நடிகை கிரண். அன்பே சிவம் படத்தில் கமல் ஜோடியாக நடித்தவர் கிரண் என்பது குறிப்பிடத்தக்கது.பிக்பாஸ்4ல் மற்றொரு மாற்றமாக இம்முறை கொரோனா தொற்றால் வார வாரம் கமல்ஹாசன் மட்டுமே நிகழ்ச்சியின் போக்கைச் சுட்டிக்காட்ட உள்ளார். ரசிகர்கள் யாரும் நேரடியாக பங்கேற்க மாட்டார்கள். அநேகமாக ஜூம் வீடியோவில் இந்த கலந்துரையாடல் நடக்கலாம் என் எதிர்பார்க்கப் படுகிறது.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Bigg boss News