நடிகைகள் கல்யாணத்தையே மறைத்தது அந்தக்காலம், கர்ப்பமாக இருக்கும் படம் வெளியிடுவது இந்தக்காலம்.. சபாஷ் சரியான முன்னேற்றம்..

by Chandru, Sep 23, 2020, 17:26 PM IST

நடிகைகளிடம் பேட்டி எடுத்தால் வயதைச் சொல்ல மாட்டார்கள். கல்யாணம் பற்றிக் கேட்டால் கப்சிப் ஆகிவிடுவார்கள்.. எத்தனை குழந்தை என்பதையும் ரகசியமாக வைத்திருப்பார்கள். ஏன் இப்படி செய்தார்கள் என்றால் அதற்குக் காரணம் ரசிகர்களிடம் மவுசு குறைந்து விடக்கூடாது, பட வாய்ப்புகள் வராமல் போய்விடக் கூடாது என்பதால் தான். அதெல்லாம் ஒரு காலம். இப்போது திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருக்கும் படங்களை வெளியிட்டு குழந்தையும் பெற்றெடுத்தார் நடிகை எமி ஜாக்ஸன்.

திருமணம் ஆனபிறகு கர்ப்பமாக இருந்தால் வயிறு காட்டிக் கொடுத்து விடும், இமேஜ் போய்விடும் என்ற பயத்தால் வெளியில் தலைகாட்ட மாட்டாமலிருந்ததும் பழங்கதையாகிவிட்டது. கர்ப்பமாக இருக்கும் போது அதே தோற்றத்தில் புகைப்படங்கள் எடுத்து நடிகைகள் சமூக வலைத்தளத்தில் அவற்றைப் பகிர்ந்து வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோஹ்லியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். நீச்சல் உடை அணிந்து தனது கர்ப்பிணி தோற்றத்தை அவர் பகிர்ந்திருக்கிறார்.

சமீபத்தில் கோஹ்லி, தான் அப்பாவாகவிருப்பதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிலையில் அனுஷ்கா தான் கர்ப்பமாக இருக்கும் படத்தை வெளியிட்டிருக்கிறார்.
பீகே, சுல்தான், பாம்பே வெல்வெட் எனப் பல வெற்றிப் படங்களில் அனுஷ்கா சர்மா நடித்திருக்கிறார். தவிரப் பரி மற்றும் பல்புள் உள்ளிட்ட படங்களை சொந்தமாகத் தயாரித்திருக்கிறார். அனுஷ்கா சர்மாவின் கர்ப்பிணி தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை சம்ந்தா சர்மாவின் தோற்றதைப் புகழ்ந்து தேவதையே எனப் பாராட்டு தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு நடிகை சமீரா ரெட்டி தான் கர்ப்பமாக இருந்த படத்தைப் பல கோணங்களில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Cinema News