பிக் பாஸ் போட்டியாளர் பற்றி வெளிவராத உண்மைகள்: வெட்கப்படும் மனிதருக்கு நடிகர் சந்திரபாபு ஆசி கிடைக்குமா?

Actor Jiththan Ramesh Life Story

by Chandru, Oct 3, 2020, 11:12 AM IST

பிக்பாஸ் போட்டி சீக்கிரமே ஆரம்பிக்கிறது. யார் யார் பங்கேற்கப்போகிறார்கள். அவர்களுக்குள் என்னென்ன வாக்குவாதம், மோதல், காதல் பிறக்கப் போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஒரு பக்கம் பாராட்டு, மறுபக்கம் வசை மாறி என இரண்டையும் கொண்டதாகவே பிக்பாஸும், பிக்பாஸில் பங்கேற்கும் போட்டியாளர்களும் அனுபவ பூர்வமாக உணர்ந்து வருகின்றனர்.

பிக்பாஸ் 4வது சீசனில் நடிகர் ஜித்தன் ரமேஷ் பங்கேற்கிறார். பாதிப் பேருக்கு இவரைத் தெரியும் பாதி பேருக்குத் தெரியாது. இவரது வெளிவராத உண்மைகள் சிலவற்றைப் பார்ப்போம்.சரத்குமார் நடித்த நாட்டாமை, சூர்ய வம்சம், முரளி நடித்த புது வசந்தம், விஜய் நடித்த லவ் டுடே, திருப்பாச்சி எனப் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தளித்த பிரபல படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகன்தான் ரமேஷ்.

இவர் ஜித்தன் படத்தில் நடித்ததன் மூலம் ஜித்தன் ரமேஷ் ஆகிவிட்டார். இவரது சகோதரர் தான் நடிகர் ஜீவா. ஜித்தன் ரமேஷ் வைஷ்னவா கல்லூரியில் பிஸ்னஸ் அட்மினிஷ்ட்ரேஷன் படிப்பை முடித்துள்ளார். சில்பா என்பவரை கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார் 2 குழந்தைகள் உள்ளனர். தந்தை ஆர்.பி.சவுத்ரி சினிமா தயாரிப்பாளர் என்பதால் சினிமா நட்சத்திரங்களிடம் ரமேஷுக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவருக்கும் நடிகர் ஆகும் ஆசை வந்தது. முதலில் வித்தியார்த்தி என்ற தெலுங்கு படத்தில் தான் ரமேஷ் நடித்தார். 2004ம் ஆண்டு இப்படம் வெளியானது. பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

தமிழில் ஹீரோவாக அறிமுகமாக எண்ணிய நிலையில் தான் நடிகை ராதிகா சரத்குமார் தயாரித்த ஜித்தன் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். படத்துக்கு பலம் சேர்க்கும் விதமாகவும் ரமேஷுக்கு ஒரு ஆதரவு தரும் வகையிலும் சரத்குமார் கெஸ்ட் ரோலில் நடித்தார். இதுவொரு எதிர்பாராத அமானுஷ்ய கதையாக இருந்ததால் படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அன்றுமுதல் ரமேஷ் என்ற பெயருடன் ஜித்தன் என்ற படப் பெயர் அவருக்குப் பட்டப் பெயராக ஒட்டிக்கொண்டது. ஆனாலும் இவருக்குத் திரையுலகில் வளர்ச்சி என்பது குறைவாகவே இருந்தது. மது, ஜெர்ரி, நீ வேணுண்டா செல்லம், மதுரை வீரன், புலி வருது, பிள்ளையார் தெரு கடைசி வீடு எனப் பல படங்களில் நடித்தார். எல்லாமே அவருக்கு ஆவ்ரேஜ் படங்களாகவே அமைந்தது. நடிப்பு, நடனம் ஆடும் திறமை இருந்தும் அதிர்ஷ்ட காற்று என்பது அவர் பக்கம் குறைவாகவே வீசியது. சினிமாவை பொருத்தவரை திறமை மிக முக்கியம் அதே சமயம் அதிர்ஷ்டமும் அதைவிட முக்கியம்.

ஜித்தன் ரமேஷ் கேமராவுக்கு முன் போதுமானளவுக்கு நடிப்பார் நேரில் அவருக்கு நடிக்கத் தெரியாது, பந்தா காட்டத் தெரியாது, தேனொழுக பேசத் தெரியாது எல்லாவற்றையும் விடப் பழகவும் வெட்கப்படுவார். இதனால் இவர் ரசிகர்களை வளைத்து போட இயலவில்லை.ரமேஷ் 14 வருடம் சினிமாவில் இருக்கிறார் என்பதே இன்னும் பெரிய விஷயம். 2016ம் ஆண்டு ஜித்தன் 2ம் பாகம் படத்தில் நடித்தார். அதன்பிறகு 2 வருடம் கேப் விட்டு மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கச் சென்றார். சில இளம் ஹீரோக்கள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள அடல்ட் படங்களில் நடித்தனர். ஆனால் இவர் அடல்ட் படத்தில் நடிக்கவில்லை ஆனால் அதுபோன்ற ஒரு டைட்டில் கொண்ட அதாவது உங்கள போடணும் சார் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டைட்டிலுக்கு முதலில் எதிர்ப்பு கிளம்பியதால் டைட்டிலில் மாற்றம் செய்யப்பட்டது. அடுத்து நிரீக்‌ஷ்னா எனத் தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

பிக்பாஸ் போட்டிக்கு ஜித்தன் ரமேஷ் வந்தால் எப்படி இருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. அவர் பேசத் தயங்குவார், யார் வம்பு தும்புக்கும் போகமாட்டார், திட்டினாலும் வாங்கிக்கொண்டு ஒதுங்கிச் செல்வார், மற்றவர்களிடம் பேசவே வெட்கப்படுவார் என்ற சில அபிப்ராயங்கள் இருக்கிறது. அதையெல்லாம் உடைத்துவிட்டு தனது தனித் தன்மையைக் காட்டுவாரா என்பதைக் காத்திருந்துதான் பார்க்க வேண்டும். மறைந்த நடிகர் சந்திரபாபு ஸ்டைலில் ரமேஷ் நன்கு நடனம் ஆடுவார். சமயம் கிடைத்தால் அவர் அந்த நடனத்தை பிக்பாஸ் ஷோவில் பயன்படுத்தினால் அது அவருக்கு பிளஸ்ஸாக அமையும், சந்திரபாபு ஆசி கிடைக்குமா? என்பதையும் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.கண்டிப்பாக இவர் யார் காதலிலும் விழ மாட்டார் என்று நம்பலாம். ரமேஷுக்கு பிக்பாஸில் ஒரு லிஃப்ட் கிடைக்க தி சப் எடிட்டர் டாட் காம் சார்பில் வாழ்த்துக்கள்.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை