பிரபல நடிகர் எழுதிய ஸ்கிரிப்ட்டில் களவாணி நடிகர் ஹீரோ..

பல படங்களில் ஹீரோவாக நடித்ததுடன் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் விஜய் சேதுபதி ரஜினிக்கு பேட்ட படத்திலும், விஜய்க்கு மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். அவர் தற்போது புதிய படமொன்றுக்குக் கதை வசனம் திரைக்கதை என முழு ஸ்கிரிபட்டும் எழுதி இருக்கிறார். இதில் களவாணி பட ஹீரோ விமல் நாயகனாக நடிக்கிறார்.

ஏற்கனவே விமல் நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் 'எங்க பாட்டன் சொத்து', இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சண்டக் காரி', தர்ம பிரபு இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கன்னிராசி' ஆகிய படங்கள் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டிற்குத் தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த "படவா, புரோக்கர், மஞ்சள் குடை, லக்கி மற்றும் இயக்குனர் வேலு இயக்கத்தில் பெயரிடப்படாத படங்களை விரைவாக முடித்துக் கொடுத்து விட்டு, இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில் 'குலசாமி' என்ற அதிரடி ஆக்ஷன் படத்திலும், இயக்குனர் சுராஜ் உதவியாளர் ராஜதுரை இயக்கத்தில் 'விடா முயற்சி விஸ்வரூப வெற்றி' என்ற படத்திலும் நடிக்கத் தயாராகி வருகிறார் விமல்.
'குலசாமி' படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை நடிகர் விஜய் சேதுபதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'குலசாமி' படத்தின் படப் பிடிப்பு இந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்குகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :