பிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.

by Chandru, Oct 18, 2020, 12:38 PM IST

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகி வருகிறது. 17 போட்டியாளர்களுக்குள் ஏற்கனவே மோதல் தொடங்கிவிட்டது. இது சில சமயம் செல்ல மோதலாக, சில சமயம் கோப மோதலாக, இன்னும் சில சமயம் ஒருவரைவொருவர் கால்களை வாரிவிட்டு காட்டிக்கொடுக்கும் மோதலாக நடக்கிறது. ரியோ ராஜ், மொட்டை சுரேஷ், அனிதா சம்பத், சம்யுக்தா, சனம் ஷெட்டி போன்றவர்களுக்கிடையே இந்த மோதல் அடிக்கடி நடக்கிறது. ஜித்தன் ரமேஷ், சூப்பர் சிங்கர் அஜீத், கேப்ரில்லா போன்றவர்கள் அமைதியாக ஒதுங்கி நிற்கின்றனர். ஆரி அட்வைஸ் வாத்தியாக இருக்கிறார்.

குறிப்பாக மொட்டை சுரேஷ் முதல் கட்டத்தில் எல்லோரையுமே தனது வழிக்கு இழுக்கும் நோக்குடன் மிரட்டிக் கொண்டிருந்தார். அவரை ஒட்டு மொத்த போட்டியாளர்களும் சேர்ந்து நக்கலடித்து பணிய வைத்து வருகின்றனர். இன்று இரவு நடக்கவுள்ள நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கமலை நடிகர் ரியோராஜ் நேருக்கு நேராக எதிர்ப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீட்டில் யார் மாஸ்க் போட்டுகொண்டு நடமாடுகிறார்கள், யார் அகத்தின் அழகு முகத்தில் தெரிய அப்படியே இயல்பாக இருக்கிறார்கள் என்று கேட்கும் கமல்ஹாசன் சக போட்டியாளர்களை விட்டே இயல்பாக இல்லாமல் மாஸ்க் போட்ட மாற்றுமுகத்துடன் போல் போலி முகம் காட்டுபவர்களுக்கு முகமூடி தரச் சொல்கிறார் கமல்.

நடிகர் ரியோ ராஜ், ஆரி உள்ளிட்ட சிலருக்கு அனிதா, சனம் ஷெட்டி போன்றவர்களால் மாஸ்க் தரப்படுகிறது. பின்னர் கமல், இங்கு. தனக்கு மாஸ்க் கொடுத்தது தவறு என்று யாராவது நினைப்பவர்கள் இருக்கிறீர்களா என்று கேட்க சட்டென இருக்கையிலிருந்து எழும் ரியோ ராஜ், எனக்கு மாஸ்க் கொடுத்தது தப்புன்னு நினைக்கிறேன் என்று கமலிடம் கூறுகிறார். அதைக் கேட்டு ஷாக் ஆகிறார் கமல். இந்த பரபரப்புடன் புரோமோ முடிகிறது. அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இரவில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் தெரியும்.

Get your business listed on our directory >>More Bigg boss News

அதிகம் படித்தவை