பிக்பாஸ் 4: இந்த விளையாட்டு விளையாடறதுக்கு வேற ஏதாவது செய்யலாம்.. கோபத்தில் சீறிய நடிகர்..

Bigg Boss 4: Aari Shouted loud at the Contestant

by Chandru, Oct 21, 2020, 12:01 PM IST

பிக்பாஸ்4 ஷோவில் போட்டியாளர்கள் எல்லோரும் அவிழ்த்து விட்ட காளைகள் போல் தங்கள் இஷ்டத்துக்கு முட்டல், மோதல்கள் நடத்துகின்றனர். நேற்று நடந்த நாடா இல்லை காடா நாடக போட்டியில் அரக்க குடும்பமும், சொர்க்க புரி அரச குடும்பமும் மோதிக்கொண்டதில் அரக்க குடும்பம் அரச குடும்பமாகவும் அரச குடும்பம் அரக்க குடும்பமாகவும் மாறிவிட்டது. அரக்கத் தலைவனாக இருந்த மொட்டை சுரேஷ் அரசனாகி விட அரக்க தலைவியாக இருந்த அர்ச்சனா அரசியாகி விட்டார்.

அரச குடும்பத்தை அரக்க குடும்பத்திடமிருந்து மீட்டு வருவதாக இளவரசன் ஆரி புறப்பட அவரை வழியிலே மடக்கும் அரக்கக் கூட்டம், நீ அடிமையாகிவிட்டாய் என்று கத்துகின்றனர். நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள இப்படிச் செய்தால் எப்படி? நீங்கெல்லாம் இந்த விளையாட்டு விளையாடறதுக்கு பதில் வேற ஏதாவது செய்யலாம் என்று கோபத்தில் சீறியதும் அரக்கக் கூட்டம் கப் சிப் ஆகிறது. இந்த சீற்றமும், கோபமும் இதுவரை ஆரியிடம் பார்க்காததால் போட்டியாளர்கள் ஷாக் ஆகி நின்றனர்.

ஒரு பக்கம் மொட்டை சுரேஷ் ராஜா உடை அணிந்து சிம்மாசனத்தில் அமர்ந்து நாற்காலியை தேய்த்துக் கொண்டிருக்கிறார். மற்றவர்கள் யாரை எப்படி கலாய்க்கலாம் என்று அரக்க வேடத்தில் குதித்து கும்மாளம் போடுகின்றனர். எப்படியோ இன்றைய பிக்பாஸுக்கு ஒரு மோதல் தயாராகிவிட்டது. சாந்தமான ஆரியின் மற்றொரு கோப முகம் இன்றைய ஹைலைட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை