தீபாவளிக்கு விஜய்யின் மாஸ்டர் ரிலீஸா? இல்லையா? சீக்கிரமே தியேட்டர்கள் திறப்பு..

Will Master Releae On Dewali

by Chandru, Oct 21, 2020, 11:52 AM IST

கார்த்தி நடித்த 'கைதி' படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதையடுத்து விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை இயக்கி உள்ளார். கொரோனா ஊரடங்கு தொடங்கி 8 மாதமாகத் திரை அரங்குகள் திறக்கப்படாததால் மாஸ்டர் ரிலீஸ் காத்திருக்கிறது. இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனுடன் இவர் இணையும் இப்படத்துக்கு தற்காலிகமாக 'கமல்ஹாசன் 232' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் அறிவிப்பு கடந்த மாதங்களில் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது. அதன்பிறகு படத்தைப் பற்றி அதிகாரப் பூர்வமாக வேறு எதுவும் வெளியாகவில்லை.
கமலுடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் திட்டம் ஒன்று ஏற்கனவே இவர்கள் இருவருக்குள்ளும் ஒரு வாய் மொழி ஒப்பந்தம் இருக்கிறது. அது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கமல் 232ல் நடக்குமா அல்லது கமல் நடிக்கும் தலைவன் இருக்கிறான் படத்தில் நடக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ஆனால் 'மாஸ்டர்' படத்தில் பணியாற்றிய இருவர் கமல் 232ல் பணியாற்றுகின்றனர். அவர்கள் மசத்யன் சூரியன் மற்றும் பிலோமின் ராஜ். இவர்கள் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் கையாளுகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மாநகரம்', கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களுக்கு பிறகு வெற்றி கரமான இந்த இரட்டையருடன் லோகேஷ் இணைந்திருந்தார். அவர்கள் தற்போது கமல் படம் மூலம் 4வது முறையாக இணைகின்றனர். இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த விவரங்கள் இறுதியானதும் வெளியாகவுள்ளது.'கமல்ஹாசன் 232' படப்பிடிப்பு நவம்பர் இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளது, மேலும் மற்ற இதில் நடிக்கும் முன்னணி நட்சத்திரங்களை யார். யார் என்பது பற்றி அறிய ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

இதற்கிடையில், விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த கேங்க்ஸ்டர் படம் 'மாஸ்டர்' வெளியீட்டிற்காக லோகேஷ் கனகராஜ் தற்போது காத்திருக்கிறார். படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது, மேலும் ரசிகர்கள் படத்தை திரையரங்குகளில் ரசிக்கக் காத்திருக்கிறார்கள். இதற்கிடையில் நவம்பர் முதல் வாரத்திற்குள் தியேட்டர்கள் திறக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தீபாவளியில் மாஸ்டர் வெளியிட வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தீபாவளியின் போது 'மாஸ்டர்' டீஸர் அல்லது டிரெய்லர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. பொங்கல் 2021ல் தான் மாஸ்டர் பெரிய திரைக்கு வரும் என நம்பப்படுகிறது. தீபாவளிக்கு வராமல் பொங்கலுக்கு மாஸ்டர் ரிலீஸ் ஆனாலும் தீபாவளிக்கு வெடிக்க வேண்டிய பட்டாசையும் சேர்த்துப் பொங்கலுக்கு வெடிக்கத் தயாராக இருக்கிறார்கள்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை