மழைக்காலம் தொடங்கி தனது கோரதாண்டவத்தை தெலங்கானாவில் அரங்கேற்றி வருகிறது. வானத்தைக் கிழித்துக் கொண்டு கொட்டுவதுபோல் பெய்யும் கனமழையால் காட்டாற்று வெள்ளத்தைப் பெருக் கெடுத்து 5000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார். மழை வெள்ளம் காரணமாக தெலங்கானாவில் மட்டும் 70 உயிரிழந்துள்ளனர். பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலங்கானா முதல்வர் எழுதிய கடிதத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் 12" data-popupmenu="popmenu12" பணிகளுக்காக 1,350 கோடி ரூபாய் உடனே வழங்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தெலுங்கு நடிகர்கள் தாராளமாக உதவி வருகின்றனர். தெலுங்கானா முதலமைச்சர் நிவாரணத்திற்கு நிதியுதவி கோடிகளில் கொட்டி வருகின்றனர்.
நடிகர் சிரஞ்சீவி ரூ.1 கோடியை அதுபோல் மகேஷ்பாபு ரூ.1 கோடியும், ஜூனியர் என்.டி.ஆர். ரூ.50 லட்சமும், விஜய் தேவரகொண்டா ரூ.10 லட்சமும் நிவாரண நிதியுதவியாக வழங்கி இருக்கிறார்கள். மேலும் நிதி வழங்க முதல்வர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதையேற்று பலவேறு நடிகர், நடிகைகள் தயாரிப்பாளர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர். அதைக்கண்ட நெட்டிஸன்கள் மக்களைக் காக்க இப்படித்தான் கொட்டிக் கொடுக்கணும் இன்னும் உதவிகள் அளிக்க வேண்டும் என்று கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர்.