விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகியது ஏன்? பிரபல நடிகை பரபரப்பு அறிக்கை..

Aditi Rao Hydari confirms opting out of Tughlaq Durbar

by Chandru, Oct 21, 2020, 11:36 AM IST

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தில் அதிதி ராவ்க்கு பதிலாக ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். முதலில் ஒப்பந்தம் செய்த அதிதி கால்ஷீட் பிரச்சனை காரணமாக அதிதி விலகியிருந்தார். இதையடுத்து பட இயக்குனர் டெலிபிரசாத் தீனதயாளன் இந்த பாத்திரத்திற்காக ராஷியை அணுகினார் என்பது குறிப்பிடத்தக்கது.விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகியது ஏன் என்பது குறித்து அதிதி ராவ் கூறி உள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக, இந்திய திரைப்படத் துறை உள்ளிட்ட உலகம் முழுவதுமே இந்த ஆண்டு 6 முதல் 8 மாதங்களுக்கு ஸ்தம்பித்தது. இதனால் நிறுத்தப்பட்ட பணிகள் எல்லாமே ஒவ்வொரு கட்டமாக ஆரம்பிக்கப்பட்டு வருகிறது. திரையுலகம் மீண்டும் தனது பணிகளைத் தொடங்கி உள்ளது. இதனால் எல்லா பணிகளுமே தாமதமாக கொண்டிருக்கையில், ஏற்கனவே போடப்பட்ட ஷெட்யூல்கள் (கால அட்டவணைகள்) மறு மதிப்பீடு செய்யப்படுகின்றன.

ஒரு நடிகையாக, யாரையும் காத்திருக்காமல் செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு இருப்பதை உணர்கிறேன். நான் ஏற்கனவே தொடங்கி நடிக்கும் படப்பிடிப்புகளை முடிக்க நான் மும்முரமாக உள்ளேன். இதனால் இதுவரை தொடங்கி நடிக்காத படங்களை நான் தாமதமாக்க விரும்பவில்லை.தற்போதைய சூழ்நிலையை மனதில் வைத்து, நான் ஏழு ஸ்கிரீன் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர் லலித்குமார் மற்றும் இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் ஆகியோருடன் கலந்தாலோசித்தோம். துக்ளக் தர்பார் தொடங்கும் நிலையில் அதில் பங்கேற்க முடியாத சூழலில் நான் இருப்பதை தெரிவித்து படத்திலிருந்து விலகிக்கொள்ளுவதாகத் தெரிவித்தேன். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இயக்குனர், டெல்லி பிரசாத், ஹீரோ விஜய் சேதுபதி மற்றும் துக்ளக் தர்பாரின் ஒட்டு மொத்த குழுவினருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். இதில் நடிக்கும் ராஷி கண்ணாவுக்கு வாழ்த்துக்கள், மேலும் ராஷி கண்ணா உங்களிடம் இந்த பாத்திரத்தை ஒப்படைக்கிறேன். நீங்கள் இப்படத்தில் நடிப்பதை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.எனது அன்பான ரசிகர்களுக்கும் நன்றி. சத்தியமாக உங்கள் அனைவரையும் மிக விரைவில் தியேட்டரில் பார்ப்பேன். அதுவரை, பாதுகாப்பாக இருங்கள், கவனித்துக் கொள்ளுங்கள்.இவ்வாறு அதிதி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் டெலிபிரசாத் கூறும்போது, விஜய் சேதுபதி மற்றும் ராசி இருவரும் துக்ளக் தர்பார் படப்பிடிப்பைத் தொடங்கினர், சமீபத்தில் ஒரு பாடலையும் படமாக்கினோம். கிட்டத்தட்ட 50% சதவீத படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. டிசம்பர் முதல் வாரத்திற்குள் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை