சக போட்டியாளர் படத்தை நெருப்பில் எரித்த நடிகர்கள்.. பிக்பாஸில் டென்ஷன்..

Actor Riyo Burn Contestant Balaji photo

by Chandru, Oct 26, 2020, 15:40 PM IST

நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியில் நடத்தும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி சூடும் சுவையுமாக, மோதலும் சாடலுமாகப் பரபரக்கிறது. கடந்த சில தினங்களாக நாடா காடா நாடகத்தில் அரக்க வம்சம், சொர்க்க புரி ராஜ வம்சம் என இரண்டு அணிகளாகப் பிரிந்து போட்டியாளர்கள் மோதிக் கொண்டனர்.

இதில் நடிகர் ஆரி கோபம் அடைந்து சக போட்டியாளர்களிடம் சத்தம் போட்டார், இந்த விளையாட்டு விளையாட்றதுக்கு பதில் நீங்கெல்லாம் வேற ஏதாவது செய்யலாம் என்றார். பின்னர் எவிக்‌ஷனுக்கான நம்பர் போட்டி, முன்னதாக பட்டிமன்றம் எனத் தினம் ஒரு திருநாளாகக் கழிந்தது.

போட்டியாளர்களைக் கமல் சந்திக்க வந்தபோது அவரிடம் அனிதா , நீங்க என்னைப் பற்றி என்ன சொன்னாலும் என்னைக் கலாய்க்கிற மாதிரியே இருக்கு என்று ஆதங்கப்பட்டார்.
இன்று மாலையில் பிக்பாஸ் போட்டி ஒளிபரப்பாக உள்ளது அதற்கான புரோமோ பரபரப்பாகி இருக்கிறது. போட்டியாளர்கள் தங்களுக்குப் பிடிக்காத போட்டியாளரின் படங்களைத் தேர்வு செய்து நெருப்பில் போட்டுப் பொசுக்குகின்றனர். ரியோ பாலாஜி படத்தையும் பாலாஜி ரியோ படத்தையும் எரிக்கிறார்கள்.

போட்டியாளர்கள் தங்களுக்கு பிடிக்காதவர்களின் புகைப் படங்களைத் தேர்ந்தெடுத்து ஏன் பிடிக்கவில்லை என்று காரணம் சொல்லி அவர்களின் படங்களை நெருப்பில் பொசுக்க வேண்டும் என்று பிக்பாஸ் கூற ஒவ்வொருவரும் சக போட்டியாளர்கள் படங்களை தேர்வு செய்கிறார்கள்.

பாலாஜி நடிகர் ரியோ படத்தைத் தேர்வு செய்து என்னை மட்டுமே இவர் டார்கெட் செய்வது போலிருக்கிறது என்று சொல்லி ரியோ படத்தை நெருப்பில் போடுகிறார். அதே போல் ரியோ, பாலாஜி படத்தைக் காட்டி சந்தோஷமான தருணங்களில் பாலா குறுக்கிட்டு அந்த சூழலையே பாழடித்து விடுவதுபோல் எனக்குத் தோன்றுகிறது . எனவேதான் அவர் படத்தை எரிக்கிறேன் என்கிறார்.போட்டி களத்தில் ஒருவரின் புகைப்படத்தை அவர்கள் கண்ணெதிரிலேயே இன்னொருவர் தீயில் போட்டு எரிப்பது பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை