வாழ்வா? சாவா? நீடிக்குமா பஞ்சாப்பின் தொடர் வெற்றி!அதிரடியை தொடருமா கொல்கத்தா!

Life? Death? Punjabs series win will continue! Kolkata will continue the action!

by Loganathan, Oct 26, 2020, 14:55 PM IST

ஐபிஎல் லீக் சுற்றின் இன்றைய போட்டியில் நான்காவது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே ஷார்ஜாவில் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்குமே இந்த போட்டி மிக முக்கியமான ஒன்றாகும்.

கொல்கத்தா அணி 11 போட்டியில் விளையாடி 6 வெற்றிகளைப் பதிவு செய்து நான்காம் இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 11 போட்டியில் விளையாடித் தொடர் நான்கு வெற்றிகளின் மூலம் 5 வெற்றிகளைப் பதிவு செய்து ஐந்தாம் இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் நான்காம் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. ஒருவேளை கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் பிளேஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்புண்டு.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரைத் தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மான் கில் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது பின்னடைவு. ஆல்ரவுண்டரான ரசூல் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகமே?ஆனால் அந்த இடத்தை நரைன் நிரப்ப வாய்ப்புண்டு. கடந்த போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு முதல் அரை சதத்தைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா அணியின் திரிபாதி மற்றும் ராணா இருவரும் சிறப்பாகச் செயல்பட்டு வருவது அணிக்கு உத்வேகத்தைத் தரலாம். இன்றைய போட்டியில் இந்த இணை ஓப்பனிங் இறங்கவும் வாய்ப்புள்ளது.

கொல்கத்தா அணியின் பந்து வீச்சைப் பொறுத்தவரை அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். கடந்த முறை இரு அணிகளும் சந்தித்த போது 2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. மேலும் கடந்த போட்டியில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் மிகப்பெரிய பலத்தைக் கொண்டுள்ளது. கடந்த போட்டியில் ஓய்வில் இருந்த மயங்க் அகர்வால் இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்புண்டு.பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் இந்த சீசன் முழுவதுமே பேட்டிங்கில் அசத்தி வருகிறார். இந்த தொடரின் அதிகபட்ச ரன் அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ராகுல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராகுல் மற்றும் அகர்வால் இணை அதிகபட்ச ரன்னை குவித்துள்ளது அணிக்கான பலம். மேலும் மிடில் ஆர்டர் பேட்டிங்கின் சொதப்பல் கடந்த போட்டிகளில் இல்லாதது அணிக்கான பலம்.பஞ்சாப் அணியின் மிகப்பெரிய பலமான பூரன் மற்றும் கெய்ல் இருவரும் மிடில் ஆர்டரில் மிரட்ட வாய்ப்புண்டு. கெய்ல் சுழற்பந்து வீச்சில் தடுமாறுவது கொல்கத்தா அணிக்கான பலம்.

கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் நரைன் இதுவரை 5 முறை கெய்ல் விக்கெட்டை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் பஞ்சாப் அணியின் ரவி பிஷோனாய் பந்து வீச்சில் மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் அணி கடந்த போட்டியில் வெற்றி பெற்றதற்குக் காரணம் சிறப்பான பந்துவீச்சு மட்டுமே, இந்த சீசனில் கடந்த போட்டியில் சிறப்பாகப் பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் அணியின் பலமாகும்.இந்த போட்டி ஷார்ஜாவில் நடைபெறுவதால் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ் வெல்லும் பந்துவீச்சைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

You'r reading வாழ்வா? சாவா? நீடிக்குமா பஞ்சாப்பின் தொடர் வெற்றி!அதிரடியை தொடருமா கொல்கத்தா! Originally posted on The Subeditor Tamil

More Ipl league News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை