பிக்பாஸில் கண்ணீர் விடுவதில் அனிதாவை மிஞ்சுவரா ரம்யா?? இன்னிக்கு இருக்கு அழுகாச்சி படலம்..

by Chandru, Oct 29, 2020, 13:13 PM IST

பிக்பாஸ் 4 விஜய் டிவியில் தினம், தினம் வெவ்வேறு மாற்றங்களை கண்டுகொண்டிருக்கிறது. மோதல், காமெடி, கலாய்ப்பது, கமென்ட் என பலவித அம்சங்களும் ஒவ்வொருவரிடமும் வெளிப்படுகிறது. ஒன்று முதல் 16 வரை இடத்துக்கான ஓட்டு போடுவது, அரக்கர் கூட்டம், ராஜவம்சம் மோதல் என ரணகளம் ஆன நிலையில் கமல்ஹாசன் போட்டியாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில். கமல் தன்னை கலாய்ப்பது போல் இருக்கிறது எனச் சொல்லி கமலை ஆச்சரியப்பட வைத்தார் அனிதா. இப்படி ருசிகரங்கள் அரங்கேறியது. நேற்று அர்ச்சனா பாலாஜியை கலாய்த்து கண்கலங்க வைத்தார். பின்னர் அடுத்த சில மணி நேரங்களில் பாலாவுடன் அம்மா வசனம் பேசி, நீ என் குழந்தையாக எனக்கு வேணும்டா என தழுதழுக்க பேசி கண்கலங்க வைத்தார்.

அவரது பேச்சைக் கேட்ட பாலாவும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு அர்ச்சனாவை கட்டியணைத்து கண்ணீர் விட்டார். அனிதாதான் எதற்கெடுத்தாலும் அழுகிறார் என்றால் இன்றைக்கு போட்டியாளர்கள் எல்லோருமே ஒட்டு மொத்தமாக அழும் படலம் நடக்கப் போகிறது என்பது புரோமோ வீடியோவில் தெரிகிறது. நீங்கா நினைவுகள் என்ற தலைப்பு கொடுத்து யாரை ரொம்ப மிஸ் பண்ணீங்க என்று போடியாளர்களின் உணர்வை பிக்பாஸ் தூண்டி விட்டிருக்கிறார். இந்த தலைப்பை அர்ச்சனா படிக்கிறார், படிக்கும்போது அவர் சவுகார்ஜானகி போல் அழத் தொடங்கிவிட்டார். அர்ச்சனா தலைப்பு எடுத்துக் கொடுத்த பின்னர் ஒவ்வொருவராக பேசுகின்றனர். பேசு போதே ஒவ்வொவொருவருக்கும் கண்ணீர் முட்டிக் கொள்கிறது.

சம்யுக்தா, மொட்டை சுரேஷ் எல்லோருக்குமே குடும்பம் கணவர், பிள்ளைகள் பற்றிய நினைவை எண்ணி நெகிழ்ந்து கண்ணீர் விடுகின்றனர். அவரை தொடர்ந்து தனது நீங்கா நினைவு என பேசும் இடுப்பழகி ரம்யா பாண்டியன் தன்னா கவர்ச்சியாகவே பார்த்து ரசிகர்களின் கண்களை குளமாக்கிவிடுவார் போலிருக்கிறது. ரம்யா இப்படி அழுவாரா என்று என்ணும் அளவுக்கு கலங்கிவிட்டார். அர்ச்சனா எனக்கு ஆரத்தி எடுத்தாங்க. அப்போது எனக்கு என் அம்மா ஞாபகம் வந்து விட்டது என்று முகத்தை மூடிக்கொண்டு கதறுகிறார். இப்படி அழுதால் யார்தான் கலங்க மாட்டார்கள். போகிற போக்கை பார்த்தால் இடுப்பழகி ரம்யா அனிதவை அழுகையில் மிஞ்சி சோக நடிகையாகி விடுவாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மொட்டை பாலாஜியை தடாலடியாக பார்த்து வந்த ரசிகர்கள் அவரது மகன் பாசத்தை சொல்லி நெகிழ வைக்கிறார். பாலாஜிய பாக்கிறப்ப எனக்கு என் பையன் ஞாபகம்தான் வருது என மொட்டை சுரேஷ் சொல்ல புரோமோ வீடியோ முடிகிறது. பலர் நெகிழ்ச்சியான தருணத்தை வரவேற்று கருத்து சொன்னாலும் பிக்பாஸில் ஜாலிக்கு பஞ்சமாகிவிட்டது என்ற புலம்பல் கேட்க ஆரம்பித்து விட்டது. இந்த வாரம் போட்டியாளர்கள் மாறி மாறி போட்டோவை எரித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது இதற்கெல்லாம் கமல் இந்த வாரம் என்ன சமாதானம் சொல்லப்போகிறார் அல்லது கண்டுகொள்ளாமல் அடுத்த சங்கதிக்கு நகர் வாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் உள்ளது.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை