பூனையை நினைத்து கண்கலங்கிய ஆக்‌ஷன் நடிகை..

by Chandru, Oct 29, 2020, 13:21 PM IST

பிடித்தமானவர்களின் இழப்பு ஒருவரின் மனதை பெரிதாக பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. பல நடிகைகள் தங்களுக்கு துணையாக நாய், பூனை என செல்லப்பிராணிகளை வளர்க்கின்றனர். அவைகளுடன் நேரம் போவதே தெரியாமல் விளையாடுவது, கொஞ்சி முத்தமிடுவது என பொழுதை கழிக்கின்றனர். நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனா கால ஊரடங்கில் 4 மாதத்துக்கும் மேல் தனிமையில் இருந்தார். தன்னுடன் ஒரே துணையாக அவர் வளர்த்த பூனை மட்டுமே இருந்தது. அதனுடனே முழு பொழுதையும் கழித்தார். அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் நெட்டில் பகிர்ந்தார்.

அட்டகத்தி படத்தில் நடித்த நந்திதா சுவேதா மெல்ல மெல்ல திறமைகளை வளர்த்துக்கொண்டு தற்போது ஆக்‌ஷன் ஹீரோயினாகும் அளவுக்கு தன்னை நிலை நிறுத்தி இருக்கிறார். தற்போது கபடதாரி படத்தில் சிபி சத்யராஜுடன் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கிறார். என்னதான் ஆக்‌ஷன் ஹூரோயினானாலும் மனதளவில் குழந்தையாகவே இருக்கிறார். தான் வளர்த்த செல்ல பூனை பெல் இறந்ததை எண்ணி கண்ணீர் விட்டிருக்கிறார். அந்த துயரத்திலிருது விடுபட புதிதாக செல்லப்பிராணி ஒன்றை வீட்டுக்கு கொண்டு வந்தார். தனது குடும்பத்தில் ஒரு செல்லப்பிராணியை சேர்ப்பதாக அறிவித்தார்.

"மிஸ்டர் லக்ஸைச் சந்தியுங்கள். பெல் (செல்ல பிராணி )நினைவுடன் எங்கள் குடும்பத்தில் ஒரு புதிய வாழ்க்கை சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் பெல்லை எந்த விதத்திலும் ஈடு செய்ய முடியாது. நாங்கள் எப்போதும் அதை நேசிக்கிறோம். அம்மா அவரை இழந்து முற்றிலும் மனம் நொந்துப்போனார். நான் பீதியடைந்தேன், அம்மாவை எப்படி இயல்பு நிலைக்கு கொண்டுவருவது என்று நான் உண்மையில் தடுமாறிப்போய் விட்டேன். நான் இந்த அழகனை (பூனை) கண்டேன். குறும்புத்தனம்மிக்கவன். அந்த குறும்பு எங்கள் முகத்தில் புன்னகையை வரவழைத்தது என்றார். மேலும் தொடர்ந்த அவர் பெல்லை தெரு நாய்கள் கடித்துகொன்றதுபற்றி உருக்கமாக குறிப்பிட்டார்.

ஒரு வினாடி, எல்லாம் முடிந்துவிட்டது! பெல் என்னை முறைத்துப் பார்த்து எப்படியாவது என்னை காப்பாற்று என்றது. ஆனால் அது என்னால் முடியவில்லை! நான் ஒரு மோசமான அம்மா. நான் உதவி செய்யமுடியாமல் தவித்தேன். என் அம்மா அந்த தெரு நாய்களுக்கு தினமும் உணவளித்துக் கொண்டிருந்தார். அந்த தெரு நாய்கள் பெல்லை கடித்து குதறின. அவர்களை நீ நண்பர்கள் என்று நினைத்தாய்.. ஆனால் அவர்கள் கொலையாளிகளாகி விட்டார்கள். எனக்கு நீ தேவை. நான் முத்தமிடுவதைத் தடுப்பதற்காக ஒவ்வொரு முறையும் என் கையிலிருந்து தப்பி ஓடுவாயே அந்த முகத்தை மறுபடியும் பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் என் படுக்கைக்கு அருகில் சிறுநீர் கழித்துவிட்டு எஸ்ஸாகிவிடுவாயே. இதையெல்லாம் நான் இனி காணமுடியாது. நான் மன உடைந்துவிட்டேன் அன்புள்ள பெல், நான் ரொம்பவே மிஸ் செய்கிறேன் என் தெரிவித்திருக்கிறார் நந்திதா சுவேதா.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை