ஆண்டவர் வருகை... எவிக்சன் ,வைல்ட் கார்ட் என்ட்ரி - பிக் பாஸ் நாள் 29

by Mahadevan CM, Nov 2, 2020, 10:55 AM IST

ஆண்டவரின் உடைகள் உண்மையில் கண்ணை பறிக்கிறது. ஆள் பாதி ஆடை பாதி என்கிற பழமொழியை மனதில் கொண்டால், கமலின் வயோதிகம் முழுமையாக மறைக்கப்பட்டு விடுகிறது. அது தான் உடை வடிவமைப்பாளரின் வெற்றி. இந்த முறை கைகளில் மக்கள் நீதி மய்யத்தின் சின்னத்தை பேஷனாக வைத்திருந்தார்.

அகத்திற்குள் அகம்

நேரடியாக தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து பேச ஆரம்பித்தார். பாலா எதிர்பார்க்காத நேரம் என்பதால் அவரிடம் ஒரு திடுக்கிடல் தெரிந்தது. அதை கவனித்த கமல் சடுதியில் "எடுத்த உடனே தகராறு பண்ணனுமா? ஏதாவது நல்ல விஷயம் ஏதாவது பேசிட்டு வரலாம்." என்று வேறு டாபிக் போனது சூப்பர் டைமிங். டைனிங் டேபிள்ல ஒன்னா உக்காந்து சாப்பிடறது, மற்றும் கிச்சன் டீமையும் பாராட்டினார். சாப்பிடற நேரத்துல எல்லாரும் ஒன்னா உக்காந்து சாப்பிடற பழக்கத்தை ரியோ தான் ஆரம்பிச்சு வச்சாரு. அதை சரியான இடத்துல நினைவு கூர்ந்து ரியோவுக்கு கிரடிட் வாங்கி கொடுத்தது ஆரி. வெல்டன் ஆரி.

சரி நல்ல விஷயம் பேசிட்டோம், இப்ப கேப்டன்சி டாஸ்க் பத்தி பேசலாம்னு பாலா பக்கம் திரும்புனாரு. கமல் சார் கொடுத்த நேரம் பாலாவுக்கு போதுமானதா இருந்திருக்கும். சம்முவை கேப்டனாக்கினதை பத்தி கேட்ட போது ஒரு புது காரணம் ஒன்னு சொன்னாரு பாலா. போன வாரம் தான் கேப்டன் கூட சண்டை போட்டேன், கேப்டன் சொல்றதை கேக்க மாட்டேன்னு சொல்லிட்டு இந்த வாரம் நான் கேப்டன் ஆனா நல்லாருக்காது சார்னு சொன்னார். கூடவே சோமை நாமினேட் செஞ்ச விஷயத்தை கோடிட்டு காட்டினார். ஆனா அந்த டாஸ்க் முடிஞ்ச உடனே பாலா சொன்ன காரணம் வேற. அந்த காரணத்தை பொதுவுல பேச வேண்டாம்னு நினைச்சுருப்பாரு போல.

அப்படியா சொன்னீங்கனு, அபாரமான உடல்மொழியோட, ரம்யா பக்கம் போனார் கமல் சார். சம்முவோட ப்ராப்ளம் சால்விங் ஸ்கில் பத்தி தான் பாலா, ரம்யா ரெண்டு பேருமே வியந்து பேசினாங்க. பாலா விட்டு கொடுத்ததை பத்தி ரம்யா கிட்ட கருத்து கேட்டாரு. "கேப்டன் ஆகனும்னு பாலாவுக்கு ரொம்ப விருப்பம், அப்படியிருக்கும் போது விட்டு கொடுத்தது ஆச்சரியமா தான் இருந்ததுனு ரம்யா சொன்னது உண்மை. "கேப்டன் ஆக எனக்கான நேரம் வரும்னு" பாலா சொன்னதை நினைவு படுத்தினார். அதை பத்தி சொல்லும் போது இன்னும் நிறைய வாரங்கள் டைம் இருக்கு சார்னு சொல்லவும், "இன்னும் கொஞ்ச வாரங்கள் தானே இருக்குனு" கமல் சார் சொன்ன போது, அர்ச்சனா சிரிச்சதை எத்தனை பேர் கவனிச்சாங்கனு தெரியல.

பாலா விட்டுக் கொடுத்ததுல ரம்யாவுக்கு ஷாக் தான். "இது முன்னாடியே தெரிஞ்சுருந்தா பாலாவை மாத்திருப்பீங்க இல்லையானு" சிரிச்சுகிட்டே கேட்டாரு. "பாலா இப்படி செஞ்சதுக்கு காரணம் என்னவா இருக்கும்னு நினைக்கறீங்க, சோம் ஜெயிச்சா மத்தவங்க்ச் இன்ப்ளையன்ஸ் பண்ணிடுவாங்கனு நினைக்கறாரோ" அப்படினு ரம்யாவை பார்த்து தான் இந்த கேள்வி கேட்டாரு கமல் சார். "இருக்கலாம் சார்னு" டிப்ளமேட்டிக்கா பதில் சொன்ன பாலா, அதுல இருந்த அபத்தத்தை புரிஞ்சுகிட்டு, "ஆமாம் சார் அது தான் காரணம்னு உடைச்சு சொல்லிட்டார்.

வீட்டுக்குள்ள இன்புளையன்ஸ் செய்யற குரூப்பை கொஞ்சம் அடையாளம் காட்டுங்கனு சொன்ன போது நமக்கே ஷாக் தான். இவ்வளவு வெளிப்படையா கேள்வி கேப்பாருனு யோசிக்கவே இல்லை. ஆனா பாலா உடனடியா எழுந்து பேர் சொல்ல ஆரம்பிச்சாரு.

ரியோ, சோம், வேல்ஸ், நிஷா, பேரை சொல்லிட்டு அர்ச்சனா பேரை சொல்லலாமா வேண்டாமானு தெரியலனு சொல்லிட்டு போனாரு பாலா. சோம் அதை முழுசா மறுத்தார். ரியோ கிட்ட கேக்கும் போது, அப்படி செஞ்சதா எனக்கு நினைவு இல்ல சார்னு சிம்பிளா சொல்லிட்டு உக்காந்துட்டாரு. அப்ப அவ்வளவு தானா, பாலா சொன்ன குற்றச்சாட்டுக்கு பதில் எதுவும் இல்லையா? னு மறுபடியும் கேக்கவும் தான் அர்ச்சனா பேச ஆரம்பிச்சாங்க.

எல்லார் கிட்டேயும் பேசறோம், எல்லாருக்கும் தான் சாப்பாடு போடறோம், எல்லார் கிட்டயும் பாசமா இருக்கோம், இதுல இன்புளையன்ஸ் எப்படி சொல்றாருனு தெரியலனு அர்ச்சனா பேசினாங்க. (மேடம் சாப்பாடு போடறதை சொல்லிக்காட்டாத இடமே கிடையாது). அந்த இடத்துல கமல் சார் குறுக்கிட்டு ஒரு விஷயம் சொல்றாரு. அர்ச்சனாவை இந்த லிஸ்ட்ல சேர்க்கலை, எனக்கு தெரியலனு சொல்லிட்டு போனாரு பாலா. அதை நினைவுபடுத்தவும் தான் இன்னும் வெளிப்படையா பேசினாங்க அர்ச்சனா.

போன வாரம் சோம் நாமினேட் செய்யும் போதே, என்னையும் மனசுல வச்சுட்டு தான் செஞ்சுருக்காருனு பட்டுனு உடைச்சுட்டாங்க. அப்ப உண்மை சுடுது... நேரடியா அதை ஒத்துக்கலேன்னாலும், மறைமுகமா அர்ச்சனாவுக்கு மாட்டிகிட்டோமேங்கற உணர்வு இருந்தா மாதிரி தான் தோணுச்சு. அதே மாதிரி பாலாவும், இந்த டாபிக் பேச ரெடியா இல்லைனு தோணுச்சு. அர்ச்சனா & டீம் கூட மோதல்ல இருந்திருந்தா, இன்னும் கூட வெளிப்படையா பாலா பேசிருக்க வாய்ப்பு இருக்கு. ஆனா அர்ச்சனா கூட பாசமா சேர்ந்து, அதுக்கப்புறம் தங்கவேட்டைடாஸ்க்ல ஒரே டீமா இருந்த காரணத்தால, பாலாவும் டிப்ளமேட்டிக்கா தான் விளக்கம் கொடுத்தாரு.

தூங்கினதால சண்டை வந்த போது ஒரு டீமா ரியாக்ட் செஞ்சாங்கனு பாலா சொல்லவும், நானும், அர்ச்சனாவும் தான் பேசினோம்னு ரியோ அதுக்கு கவுண்ட்டர் கொடுத்தார். "ரம்யா கூட பேசினாங்களேனு" கமல் சாரே பாயிண்ட் எடுத்து கொடுக்க, அதை கெட்டியா பிடிச்ச அர்ச்சனா, "ரம்யா பேரை அவர் இன்புளையன்ஸ் லிஸ்ட்ல சொல்லலை சார்" நோட் தி பாயிண்ட் யுவர் ஆனர்னு சொன்னாங்க.

இது இப்படியே போயிட்டு இருக்கும் போது சனம் இந்த பிரச்சினைக்குள்ள வராங்க. மொத்தம் இங்க ரெண்டு குரூப் இருக்கு சார்னு கொளுத்தி போட, "ஓ.. அப்ப ரெண்டு சைடு இருக்கானு" தெரியாத மாதிரியே கேட்ட கமல் சாரோட பர்பாமன்ஸ் செம்ம. ரியோ குரூப் இன்புளையன்ஸ் செய்யறாங்கன்னா, பாலாவும் ஒரு இன்புளையன்சர் தான் சார்னு சொன்ன உடனே ரியோ பயங்கரமா கைதட்டினாரு. வொய் ரியோ. ? அப்ப ரியோ காண்பித்த உடல்மொழி ரசிக்கக் கூடியதா இல்லை.ஆரியும் தன் பங்குக்கு ரெண்டு குரூப் இருக்கறதை உறுதிபடுத்தினார்.

இந்த வீடு தனி மனிதர்கள் தங்கள் தனித்துவத்தை, திறமைகளை நிரூபித்து கொள்ளும் ஒரு வாய்ப்பு. இந்த இடத்தில் ஒரு குரூப்பா செயல்படும் போது கிடைக்கும் ஆதாயம் என்னானு எனக்கு தெரியலனு மேலோட்டமா மெசேஜ் சொன்னாரு கமல் சார்.

இந்த மொத்த மேட்டர்லேயும் உங்க டோட்டல் ரியாக்சன் இவ்வளவு தானா கமல் சார். நேரடியா இது தப்புனு கண்டிக்க முடியாதுன்னாலும், இதனபாதிக்கப்படறவங்களுக்காக இன்னும் கொஞ்சம் அழுத்தமா கண்டிச்சுருக்கலாம்.

இந்த குரூப்பிசம் பிரச்சினைல போன சீசனையும், இந்த சீசனையும் கம்பேர் செஞ்சு சில பேர் பேசறாங்க. இப்ப இதை கண்டிக்கற கமல், ஏன் போன சீசன்ல சாண்டி + கவின் & கோவை கண்டிக்கவே இல்லையேனு கமல் மேல சில பேர் விமர்சனம் வைக்கறாங்க. போன சீசன்ல தான் முதல் தடவையா குரூப்பிசம்னு நாம பார்த்தது, கேள்விபட்டது எல்லாமே.. போன சீசன் ஆரம்பத்துல தர்ஷன் முகின் கதையை கேட்டு, நான் அவங்களுக்காக விளையாடப் போறேன்னு கவின் சொன்ன போது, ஆரம்பத்துல யாரும் அதை பெருசா கண்டுக்கலை. அந்த ஒரு பாயிண்ட் தான் கவினுக்கு கிடைச்ச அபரிமிதமான ஆதரவுக்கு காரணம். ஆனா கொஞ்ச நாள் ஆனதுக்கு அப்புறம் தான் இது குரூப்பிசம்னு நமக்கே தெரிய வந்தது. தொடர்ந்து சேரன் பாதிக்கபட்ட போது தான் இது பலருக்கு புரிஞ்சுது. ஆனா அதுக்குள்ள பாய்ஸ் டீம் விஸ்வரூபமா வளர்ந்துட்டாங்க.

அதில்லாம என்ன தான் குரூப்பிசம்னு கவின், சாண்டியை வெறுத்தாலும், பாய்ஸ் டீம்ல இருந்த தர்சன், முகினை எல்லாருக்கும் பிடிச்சுருந்தது. சாண்டி தான் போன சீசனோட எண்டர்டெயினர். இப்படி மக்கள் கிட்ட ஆதரவு இருக்கும் போது பிக்பாஸ் டீமால எதுவும் செஞ்சுருக்க முடியாது. அதுவுமில்லாம அவங்க குரூப்பா இருக்கறது மத்தவங்களுக்கு ஆபத்துனு நாம தெரிஞ்சுக்க, நாலஞ்சு வாரத்துக்கு மேல ஆச்சு. கூடவே போன சீசன்ல குரூப்பிசம்னு யாரும் கம்ப்ளையிண்ட் செய்யல.

ஆனா இந்த சீசன் அப்படியில்லை. எல்லாருக்கும் குரூப்பிசம் பத்தி தெரியும். மக்கள் உட்பட. குரூப்னு நாம சொல்ற ரியோ & கோ ஆரம்பத்துல இயற்கையா அமைந்த கூட்டணி. ரியோ, நிஷா ரெண்டு பேரும் விஜய் டிவி ப்ராடக்ட், நிஷாவும், வேல்ஸும் கிராமத்துல இருந்து வந்ததால ஒன்னா சேர்ந்துட்டாங்க. அர்ச்சனா வந்த உடனே, ரியோ நட்புங்கறதால அவங்களும் அங்க போனாங்க. சோம் + அர்ச்சனாவுக்கு நல்ல புரிதல், சோ சோம் இந்த குரூப்புக்குள்ள வந்துட்டான். இதெல்லாம் நம்ம கண்ணு முன்னாடி நடந்தது. ரமேஷ், இவங்களுக்கு அனுகூலமா இருக்கறதால அவர் பேர் எங்கேயும் வரலை.

குரூப்பிசம் அடுத்து என்னென்ன செய்யும்னு நமக்கும், ஹவுஸ்மேட்ஸுக்கும் தெரிஞ்சதால தான் இதை ஆரம்பத்துலேயே தடுக்கனும்னு நினைக்கிறோம். உள்ள இருக்கறவங்களுக்கும் அது தெரிஞ்சுருக்கு. சுரேஷ் பாதிக்கப்பட்ட போது, கார்னர் செய்யறாங்கனு பேசினார். அதுக்கப்புறம் அர்ச்சனா டீம் கூட ராசியானதுக்கு அப்புறம் அப்படி சொல்றதில்லை. ஆனா ஆரி, குரூப்பிசம் பத்தி பேசும் போது சுரேஷ் வாயை திறக்கல. பாலா சப்போர்ட் பண்ணல. போன தடவை ஆஜித், ரமேஷ் ஜெயிலுக்கு போன போது ஆரி வாயை திறக்கல. பாலாவுக்கு புரிய வச்சதே சுரேஷ் தான். ஆனா பாலாவோட கேம் இப்ப வேற லெவல்.

கூட்டி கழிச்சு பார்த்தா ஹவுஸ்மேட்ஸ் எல்லாருமே தனக்கு பிரச்சினை வராம இருந்தா போதும்னு தான் இருக்காங்க. இதுல தனக்காகவும், பொது பிரச்சினைக்காகவும் பேசறது சனம் மட்டும் தான். குரூப்பிசம்னு ஹவுஸ்மேட்ஸ் கிட்ட இருந்தே கலகக்குரல் கேக்கறதால இப்ப கமல் சாரும் அதை பத்தி மேலோட்டமா கேக்கறாரு. உள்ளிருந்து வரும் அப்ஜக்சன் குரல்ல சத்தம் இல்லைங்கறதையும் புரிஞ்சுக்கனும்.

அடுத்து அனிதா பேசும் போது ஹவுஸ்மேட்ஸ் நடந்துகிட்டதை கண்டிச்சு பேசினாரு. அனிதாவுக்கு ஜிவ்வுனு இருந்திருக்கும். கண்டேன் சீதை உதாரணம் அனிதாவும் புரிஞ்சுருக்குமானு தெரியல. பார்க்கலாம். ஆனா அந்த விசாரணைல ஷிவானி தான் தெளிவா பேசினாங்க. பொண்ணு செம்ம தெளிவுப்பா....

இந்த சீசன்ல டாஸ்க் கண்டண்டுக்கு பிக்பாஸ் டீம் அதிகமா யோசிக்கறதில்லை. ஹவுஸ்மேட்ஸ் செய்யற சின்ன விஷயத்தை கூட ஒரு டாஸ்க்கா மாத்திடறாங்க. வேல்ஸ் மாதிரி ரியோ நடிச்சு காட்டினதையே ஒரு முழு டாஸ்க்கா மாத்தி கொடுத்துட்டாங்க.

ஒவ்வொருவரும் இன்னொரு ஹவுஸ்மேட்ஸ் போல நடித்து, தான் ஏன் இந்த வீட்ல இருக்கனும், ஏன் இருக்கக் கூடாதுனு சொல்லனும்.
பாலா - ஆரி
சம்மு - சனம்
சோம் - ரம்யா (என்ன வேலைய்யா பார்க்கறீங்க)
நிஷா - வேல்ஸ்
வேல்ஸ் - ஆஜித்
ரமேஷ் - அனிதா
அர்ச்சனா சுரேஷ்
ரியோ பாலா

இது ஒரு வகையில கொளுத்தி போடும் டாஸ்க் தான். இதுல இருந்து ஏதாவது பத்திக்கும்னு எதிர்பார்க்கலாம்.இதுல பெஸ்ட்னு சொல்லனும்னா சம்மு, ரமேஷ், வேல்ஸ் மூணு பேரும் செம்ம ஜாலியா பண்ணினாங்க.

அடுத்து எவிக்சன் தான். மீதி ஒருந்த 5 பேர்ல நிஷா, சுரேஷ், சோம் இந்த வரிசைல சேவ் ஆனாங்க. ஆஜித், வேல்ஸ் ரெண்டு பேர்ல ரொம்ப சஸ்பென்ஸ் வைக்காம வேல்ஸ் வெளிய போனதா அறிவிச்சாரு. ஆஜித் சேவ்னு தெரிஞ்ச உடனே ஓடிப் போய் ஆஜித்தை கட்டி பிடிச்சு தூக்கினார் பாலா. அது விமர்சனத்துக்கு உள்ளாகலாம்.சீக்கிரமா எல்லார்கிட்டையும் சொல்லிட்டு, ஒரு பாட்டு பாடிட்டு கிளம்பினாரு வேல்ஸ். தனக்கு கொடுத்த காயினை சம்முவுக்கு கொடுங்கனு அர்ச்சனா சொன்னதுல, எந்த உள்நோக்கமும் இல்லைனு நம்புவோம்.

வீட்டுக்குள்ள இருந்த வரைக்கும் வேல்ஸ்க்கு சரியான வாய்ப்பும் கிடைக்கல. கிடைச்ச வாய்ப்புலேயும் அவரால எதுவும் செய்ய முடியல. அதுக்கு முன்னாடியே வேல்ஸ் மேல டிப்ளமேட்டிக் விமர்சனம் வந்ததுல அவர் ஒடுங்கி போய்ட்டாருனு தான் சொல்லனும். வெளிய மக்கள் கிட்டேயும் அவ்வளவு நல்ல பேர் இல்லை. போதாக்குறைக்கு அர்ச்சனா டீம்ல மாட்டிகிட்டு படாதபாடு பட்டுட்டாரு. சோ அவர் வெளிய போனது ஒரு வகைல நல்லது தான்.

ஆனா இந்த 30 நாளும் அவர் மேல விழுந்த பிம்பத்தை ரெண்டே நிமிஷத்துல துடைச்சு வெளிய அனுப்பினார் கமல் சார். லவ் யூ சார். வேல்ஸ் தாழ்வு மனப்பான்மைல இருக்கறதை கண்டுபிடிச்சு, மிகச்சரியா அவரோட சாதனைகளை அவர் வாயால சொல்ல வச்சது நல்ல விஷயம். வேல்ஸ்க்கு நடந்தது இன்னொருத்தருக்கு நடக்க கூடாது. உள்ள இருக்கற எல்லாருமே மல்டி டேலண்டட் பர்சனாலிட்டீஸ் தான் அவங்கவங்க துறைல ஸ்பெஷலிஸ்ட் தான். திறமையானவங்க. சோ அந்த திறமைக்கு மரியாதை கொடுக்கனும்னு நெட்டிசன்ஸை கேட்டுக்கறேன். ஒருத்தரை பத்தி முழுசா தெரியாம விமர்சனம் செய்யாம இருந்தாலே போதும்.

இந்த வார புத்தக அறிமுகம். எழுத்தாளர் திரு.தொ.பரமசிவம் எழுதிய அழகர் கோயில் புத்தகத்தையும், திரு. தொ. பரமசிவம் அவர்களையும் சேர்ந்தே அறிமுகம் செய்து வைத்தார். இந்த புத்தகம் இணையத்தில் வாசிக்க கிடைக்கிறது. முயற்சித்து பாருங்கள்.

பிறகு இந்த சீசன் வைல்ட் கார்ட் கண்டஸ்டண்டாக திருமதி.சுசித்ரா வீட்டுக்குள் சென்றார். கமல் சாருக்கு ஒரு புத்தகத்தை பரிசாக கொடுத்து சென்றது பட்டாசு.

சுசித்ராவுக்கு அறிமுகம் தேவையில்லை. அவருக்கு பாசிட்டிவான பக்கமும் இருக்கு, நெகட்டிவான பக்கமும் இருக்கு. ஒரு மிகப்பெரிய டிப்ரஷன்ல இருந்து மீண்டு வந்துருக்காங்க. இந்த வாய்ப்பு அவங்களுக்கு நல்லது மட்டுமே செய்யனும்னு என்னை போன்ற பலரின் வேண்டுதல். பார்ப்போம்.

You'r reading ஆண்டவர் வருகை... எவிக்சன் ,வைல்ட் கார்ட் என்ட்ரி - பிக் பாஸ் நாள் 29 Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை