புலிக்கு அருகில் சென்று படம் எடுத்த பிரபல ஹீரோயின்..

by Chandru, Nov 2, 2020, 11:08 AM IST

டிஸ்கவரி சேனல் பார்க்கும் பிரியர்கள் ஏராளமான பேர் உண்டு. அதில் பல நடிகைகளுக்கும் ஆர்வம் அதிகம். மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் மட்டுமல்லாமல் காட்டுப் பகுதிகள் ஆராய்ச்சி செய்து வனவிலங்குகள் அருகிலிருந்து புகைப் படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர். கடந்த ஆண்டு அவர் ஆப்ரிகா காடுகளுக்கு சென்று வனவிலங்குகளை நிறையப் படங்கள் எடுத்தார். அதைத் தனது வலைத் தள பக்கத்திலும் வெளியிட்டார்.

அவரைப் போலவே நடிகை சமந்தாவுக்கும் செல்லப் பிராணிகள், வன விலங்குகள் மீது ஆர்வம் அதிகம் தனது வீட்டில் செல்ல நாய் வளர்க்கும் சமந்தா அதனுடன் விளையாடி பொழுதைக் கழிக்கிறார்.

சமீபத்தில் சமந்தா மகராஷ்டிராவில் உள்ள ததோடப அந்தேரி புலிகள் சரணாலய காட்டுப்பகுதிக்குச் சென்றார். அங்குப் பாதுகாப்பாக வனத் துறையின் வாகனத்தில் சரணாலயத்தைச் சுற்றிப் பார்த்தார். சரணாலயத்தில் சுதந்திரமாகச் சுற்றித்திருந்தப் புலிகளை கண்டு ஆச்சரியம் அடைந்தார். வாகனத்தை மிக நெருக்கமாகப் புலி அருகில் செல்லச் சொல்லி ரசித்தார். அங்கு சுற்றித் திரிந்த புலிகளை அவர் படம் எடுத்தார். அதனை தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

சமந்தாவும் மாளவிகாவும் தற்போது படப்பிடிப்பு மூடுக்கு வந்திருக்கின்றனர். மாளவிகா ஏற்கனவே விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து முடித்து அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகின்றன . 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி என்ற நிலையில் மாஸ்டர் உள்ளிட்ட எந்த படமும் இன்னும் ரிலீஸ் பற்றி அறிவிப்பு வெளியிடவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.

மாஸ்டர் ரிலீஸ் தேதி பற்றித் தெரியாத நிலையில் அப்படத்தில் நடித்திருக்கும் மாளவிகாவுக்கு நடிகர் தனுஷுடன் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. இப்படத்தை கார்த்தி நரேன் டைரக்ட் செய்கிறார்.சமந்தாவும் விரைவில் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். காற்று வாக்குல ரெண்டு காதல் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரும் நடிக்க உள்ளனர். இந்த மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை