தனித்தன்மையை இழந்த நிஷா ,ஆரி - அனிதா உரையாடல் - நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது? நாள் 61

by Mahadevan CM, Dec 5, 2020, 13:15 PM IST

சொப்பனசுந்தரி நாந்தானே பாட்டு போட்டாங்க. எல்லாரும் தேமேனு ஆடிட்டு இருந்தாங்க.இன்னிக்கு மார்னிங்கும் ஒரு கன்றாவி டாஸ்க். வீட்டு வேலை செய்யும் போது டான்ஸ் ஆடிட்டே செஞ்சா எப்படி இருக்கும்னு கேப்பி செஞ்சு காமிச்சாங்க. டான்ஸ் ஆடிட்டே ட்ரெஸ் சேஞ்ச் பண்றது, பாத்திரம் தேய்க்கறது, துணி துவைக்கறது, சமைக்கறது எல்லாமே டான்ஸ் ஆடிட்டே செய்யனுமாம்.

அன்பு குரூப் டிஸ்கஷன்ல இருந்தாங்க. அவங்க குரூப் ஆளு நிஷாவை பத்தி பேசிட்டு இருந்தாங்க. இந்த வாரம் முழுவதும் நிஷா ரொம்ப சோகமா இருக்காங்களாம். கமல் சார் எபிசோட்ல இருந்து அப்படி இருக்கறதா அர்ச்சனா சொல்லிட்டு இருந்தாங்க. எவிக்‌ஷன் டாப்பிள் கார்ட் கோட்டை விட்டதுக்கு கமல் சார் திட்டினதா நினைச்சுட்டு இருக்காங்க, தனித்துவமா விளையாடுங்கனு சொன்னதும் நிஷாவுக்கு புரியல. இதுல நீங்க வீக்கான கண்டஸ்டண்ட் அப்படினு பாலா சொல்லிருக்காரு. இதில்லாம ஆரி ரெண்டு மூணு தடவை ஏதோ சொல்லிருக்காரு போல. அவங்களை எதிர்த்து கேள்வி கேக்காம அர்ச்சனா, ரியோ, ரமேஷ் கிட்ட புலம்பிருக்காங்க.

ஆரி என்ன சொன்னாருனு தெளிவா இல்லை. ஏன் அதெல்லாம் எடிட்டிங்ல போகுதுனு தெரியலை. You are unfit to the house னு நிஷாவை பார்த்து சொன்னது ஆரி தான். அது டெலிகாஸ்ட் ஆகலை. ஆனா நிஷா புலம்பினது மட்டும் போடறாங்க. இதே வார்த்தையை அனிதாவையோ, சனமை பார்த்தோ யாராவது சொல்லிருந்தா என்ன ஆகிருக்கும். நிஷாவோட காமெடி சரியில்லைனு சீரியஸான டோன்ல ஆரி சொன்னதா அர்ச்சனா சொல்றாங்க. போராட்டம்ங்கற வார்த்தை யூஸ் பண்ணி நிஷா கிட்ட பேசிருக்காரு. டெலிபோன் டாஸ்க்ல பேசினதுக்கும் ஏதோ சொல்லிருக்காரு. இது எதுவுமே டெலிகாஸ்ட் ஆகலை. ஏன்னு விஜய் டிவி தான் பதில் சொல்லனும்.

எந்த விஷயத்துக்கும் நிஷா எதிர்ப்பு தெரிவிக்கல. கூடவே இவங்க கிட்ட புலம்பிருக்காங்க. தனக்கான ஒரு நீதியை கேக்கக் கூட தெரியாத ஒரு கண்டஸ்டண்ட் 60 நாள் இந்த வீட்டுக்குள்ள இருந்திருக்காங்க. தெரியாம சொல்லப்பட்ட ஒத்த வார்த்தைக்கு வெட்டு, குத்து பஞ்சாயத்து எல்லாம் நடக்குது. ஆனா நிஷா என்னடான்னா.......

கிச்சன்ல இருக்கும் போது ஆரி கிட்ட பேசறாங்க நிஷா. அப்ப கூட சர்வ ஜாக்கிரதையா ரொம்ப பணிவா, பேசினதை பார்க்கும் போது ரொம்பவே கடுப்பா இருந்தது. அந்த வீட்ல எல்லாரும் ஒன்னு தான். எல்லாருமே கண்டஸ்டண்ட். வயசு கூட குறைய இருந்தாலும், அனைவரும் சமம். நேத்து ஆரிக்கு கொடுத்த அளவுக்கு பவ்யமான மரியாதையை யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனா அதை பார்க்கும் போது நிஷாவோட நிலைமையை புரிஞ்சுக்க முடியுது. அங்கிருக்கறவங்க எல்லாருமே நிஷாவை கேவலமா, கீழ்தரமா நடத்தறாங்க. அதை தட்டிகேக்க நிஷாவுக்கு தெரியல.

"நீங்க நேத்து, காமெடி தெரியலனு சொன்னது காமெடிக்குத் தானேனு" ஏதோ ரகசியம் பேசறா மாதிரி கேக்க வேண்டிய அவசியம் என்னனு தான் புரியல. அதுவும் காமெடிக்கு தானே சொன்னீங்கனு பதிலோட கேள்வி கேக்கறது. சர்வ ஜாக்கிரதையா இருக்காங்களாம். அங்க பவ்யமா பேசிட்டு, வெளியே வந்து "நான் ஆரி கிட்ட பேசிட்டேன்" னு ஜம்பமா சொல்லிக்கறாங்க.

நிஷாவோட இந்த நிலைமைக்கு காரணம் ரியோவும், அர்ச்சனாவும் தான். முக்கியமா ரியோ. என்னவோ பாசமலர் படம் காட்டறா மாதிரி நினைச்சுகிட்டு, அன்பு, பாசம்னு பேசி, தன்னோட தனித்தன்மையை தொலைச்சுட்டு நிக்கறாங்க நிஷா. இந்த வீட்ல வந்த உடனே தனியா விட்ருந்தா, அவங்க கேரக்டர் வெளிப்பட்டிருக்கும். "உனக்கு ஒன்னும் தெரியாது", " இரு நீ பேசாதனு அடக்கியே வச்சு, ஒரு விதமான எமோஷனல் ப்ளாக்மெயிலிங் தான் செய்யறாங்க. அதோட உச்சம் தான் நேத்து ஆரிகிட்ட பேசின விதம். நாம எதிர்த்து பேசிட்டோம்னா, நம்மளை தப்பா நினைச்சுருவாங்களோனு பயம். இன்னிக்கு கேள்வி கேட்டுட்டா, நம்மளை ஒதுக்கி வச்சுருவாங்களோனு பயம். மத்தவங்க சூப்பர்வைஸ்லேயே வாழ்ந்து, இன்னிக்கு தனியா எந்த ஒரு முடிவும் எடுக்கத் தெரியாத ஒரு நிலைக்கு போய்ட்டாங்க நிஷா.

தனித்து செயல்பட முடியாத, தனித்தன்மை இல்லாத, தன்னம்பிக்கை இல்லாத நிஷா வீட்டுக்குள்ள இருக்கறதும், இதெல்லாம் இருந்த சம்யுக்தா வெளியே போனதும் தான் எவ்வளவு முரண்.

அதுக்கப்புறம் எல்லாரும் ஜாலியா பாட்டு பாடி விளையாடிட்டு இருந்தாங்க. ஆஜித் பாட்டு பாட சனம் ஆட, அடடா அந்த கண்கொள்ளாக் காட்சி அன்சீன்ல இருக்கு பார்த்துடுங்க.

கேப்டன் ரமேஷ் உண்ட மயக்கத்துல கட்டையை சாய்ச்சு, தூங்க முடியலையேனு வருத்தப்பட்டுட்டு இருக்கும் போது, அவரை ஆக்டிவிட்டி ஏரியாவுக்கு கூப்பிடறாரு பிக்பாஸ்.

அங்க தனியா ஒரு சோபா போட்ருந்தாங்க. "இந்த வீட்டுக்கு வந்து 60 நாள் ஆச்சு. உங்களை பார்த்துட்டு இருக்கற மக்களை மகிழ வைக்கவும், திருப்திபடுத்தவும் என்ன செய்தீர்கள் என்பதை சொல்லுங்கள்" இது தான் டாஸ்க்.

இதுல டாஸ்க் செஞ்சது, டான்ஸ் ஆடினது, சாப்பிட்டது, சமைச்சது, பாத்ரூம் கழுவினது, இதெல்லாம் கணக்குல வராதுன்னுட்டாரு பிக்பாஸ். ரமேஷ், சோம், ஆஜித், கேப்பி, நிஷா, ரம்யா எல்லாரும் வந்து பயங்கரமா உளரிட்டு இருந்தாங்க. அவங்க பேசும் போதெல்லாம் குறுக்கிட்ட பிக்பாஸ், திருத்தம் சொல்லிட்டே இருந்தார். ஒருத்தரும் உருப்படியா பதில் சொல்லலை. பார்க்கற நமக்கே வெறுத்துப் போச்சு.

ஆரி, பாலா, அனிதா இடையே ஒரு உரையாடல் நடந்தது. சனம்க்காக ஓட்டெடுப்பு எடுத்த போது அவங்களுக்கு ஆதரவா ஆரி நடந்துகொண்டார் என்பது அனிதாவினுடைய குற்றச்சாட்டு. ஒவ்வொர்த்தர் கிட்டயும் தனித்தனியா கேட்டதை குறை சொன்னாங்க அனிதா. சனம் வெற்றியாளர்னு நம்பினதால நான் அப்படி செஞ்சதா ஆரி சொல்றாரு. நான் நியாயத்துக்காக போரடறேன்னு சொன்னது இங்க குறிப்பிடவேண்டியது.

இந்த டாஸ்க்ல மொத்தமா 4 பேர் தான் ஜெயிச்சுருக்காங்க. அந்த 4 பேர் யாருனு தெரியல. அந்த டாஸ்க்ல இருந்த ஒவ்வொருத்தர் பர்பாமன்ஸ் பத்தியும் எவால்யுவேட் செஞ்சு ரிப்போர்ட் அனுப்பிருக்காரு பிக்பாஸ். அதை வச்சு தான் தரவரிசை படுத்துதல் நடந்துதானும் தெரியல. ஆனா அனிதாவுக்கும், ஆரிக்கும் விரிசல்னு மட்டுல் தெரியுது. அதுவும் அனிதாவை பார்த்து loserனு சொன்னது, அதுவும் பல தடவை சொன்னதை அனிதா அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டாங்கனு தெரியுது.

சனம் முதல் இடத்துல இருக்கறதை ஆரி ஒத்துக்கறாரு. அதுவும் சனம் DESERVING அப்ப்டினு சொல்றது, அதுதான் நியாயம்னு சொல்றதுக்கு போதுமான காரணங்கள் இல்லைனு தோணுது. ஒரு வேளை "நான் கால் பண்ணவங்க, வெளியே போய்ட்டாங்கனு சனம் சொன்ன ரீசனை ஒத்துக்கறாரு போல. தன்னோட டார்கெட் வெளியே போனதுக்கு சனம் ஒரு முக்கியமான காரணம்னு நினைக்கறாரோனு தோணுது. இத்தனைக்கும் போன வாரம் ஆரி-சனம் இடையே கருத்து வேறுபாடு இருந்தது.

அப்படி இல்லாம குழப்பத்துல ஏதோ பண்ணிட்டு, அதுக்கு ஜஸ்டிபிகேஷன் கொடுக்கறாரோ என்னவோ. மொத்தத்துல நேத்து எபிசோட் ரொம்பவே வேஸ்ட்.

More Bigg boss News


அண்மைய செய்திகள்