திருமணம் முடிந்த கையோடு தனிக்குடித்தனம் சென்ற நடிகை..

by Chandru, Dec 5, 2020, 13:28 PM IST

திருமணத்துக்கு முன்பு பெற்றோருடன் வாழும் நடிகர் நடிகைகள் திருமணத்துக்குப் பிறகு தனிக்குடித்தனம் செல்வது வழக்கமான ஒன்றாகி விட்டது. அதற்கு நடிகை காஜல் அகர்வாலும் விதிவிலக்கல்ல.காஜல் அகர்வால் ஒரு மாதத்திற்கு முன்பு தனது பாய்ஃ பிரண்ட் கவுதம் கிட்ச்லுவை மணந்தார். இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளாக நட்பில் இருந்து வந்தனர். ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்து திருமணத்தில் முடிந்தது. கடந்து அக்டோபர் 30ம் தேதி இவர்கள் திருமணம் நடந்தது.

திருமணத்துக்குப் பிறகு தனிக்குடித்தனம் போக முடிவு செய்திருந்தனர். அதற்காக வீடும் தயாராக வைத்திருந்தனர். கவுதம் கிட்ச்லு இன்டீரியர் டிசைனர் தொழில் அதிபராக உள்ளார். அதற்கான நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். தங்களது வீடு இப்படித்தான் இருக்க வேண்டும் இந்த வசதிகள் எல்லாம் இருக்க வேண்டும் என்று எல்லோரும் முடிவு செய்திருப்பார்கள். காஜலும் அதுபோல் தனது வீடு பற்றி பல விஷயங்களை முடிவு செய்து வைத்திருந்தார்.

அண்மையில் ஒரு நேர்காணலில், காஜல் அகர்வால் இதுபற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறும்போது எனது வீடு விஷயத்தில் நான் செய்ய வேண்டியதெல்லாம் எனக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பதை வெளிப்படுத்துவது தான் மீதமுள்ளவற்றை கவுதம் கவனித்து கொள்கிறார் என்றார். புதிய வீடு மிகவும் உன்னதமாக அடிப்படை அழகியலில் டிசைனுடன் வடிவமைக்கப்படுகிறது. அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக விளக்குகள் போன்ற அலங்கார பொருட்கள் தரைவிரிப்புகள் எல்லாவற்றையும் இருவரும் தேர்வு செய்தனர். எங்கள் வீடு வீடு மிகவும் ஹைடெக் என்று காஜல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். புதுவீட்டில் இருவரும் ஹோமம் வளர்த்து கிரஹபிரவேசம் செய்தனர்.

காஜலும் கவுதமும் தங்கள் திருமணத்திற்குப் பிறகு மாலத்தீவுக்கு சென்றனர். சுமார் ஒரு மாதம் அங்கு அவர்கள் தேனிலவு கொண்டாடினார்கள். அவர்களின் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் பேசக் கூடியவையாக அமைந்தன. குறிப்பாக அவர்கள் தங்கியிருந்த நீருக்கடியில் அறை, ஸ்கூபா டைவிங் போன்றவை வைரலாகின. காஜல் விரைவில் கோரட்டலா சிவாவின் ஆச்சார்யா படத்தில் சிரஞ்சீவியுடன் நடிக்க உள்ளார். அடுத்து இந்தியன் 2 படப்பிடிப்பிலும் டிகே இயக்கும் திகில் படத்திலும் நடிக்கிறார்.

More Cinema News


அண்மைய செய்திகள்