நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கில் நடித்து வந்தார். கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, சூர்யாவுடன் என் ஜி கே போன்ற சில படங்களில் நடித்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். பாலிவுட் ஆசையில் இந்தி படங்களில் நடிக்கச் சென்றார். ஒன்றிரண்டு படங்கள் தேடி வந்தன. இதற்கிடையில் அவர் போதை மருந்து வழக்கில் தொடர்புப்படுத்தப்பட்டார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்குச் சென்றது. அவரது காதலி ரியா சக்ர போர்த்தி சுஷாந்த்துக்கு போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக ரியா மீது சுஷாந்த் தந்தை போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போதை மருத்து தடுப்பு அதிகாரிகள் விசாரித்து ரியாவை கைது செய்தனர். பின்னர் அவர் கொடுத்த வாக்குமூலத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்,ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் பெயர்களைத் தெரிவித்தார். அந்த வகையில் அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நடிகை ரகுல் ப்ரீத்தியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த பிரச்சனையில் சிக்கி இருந்தபோதும் ரகுலுக்கு அஜய் தேவகன் இயக்கி நடிக்கும் மே டே என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. இதில் சிறப்பு வேடத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார். இதுகுறித்து ரகுல் கூறும்போது அமிதாப்புடன் நடிக்க வேண்டும் என்ற கனவு இப்படம் மூலம் நிறைவேறுவதாகத் தெரிவித்தார். நடிகை ரகுலும் சமூக உணர்களை அவ்வப்போது சமூக வலைத் தளத்தில் வெளிப்படுத்துகிறார். பாதுகாப்பான இருசக்கர சவாரி, மரக்கன்றுகளை நடவு செய்தால், கொரோனா விழிப்புணர்வு என பல்வேறு விதமான விழிப்புணர்வுகளில் நட்சத்திரங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு அதுபற்றி இணைய தளத்தில் பகிர்கின்றனர்.
ரகுல் ப்ரீத் சிங் தனது சமூக ஊடகப் பக்கத்தில் ரத்த தானம் செய்யுமாறு தனது ரசிகர்களிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும் இரத்த தானம் குறித்துக் குறிப்பிடும்போது கொரோனா காலகட்டத்தால் ரத்தம் தேவைப்படும் எண்ணிக்கையில் 200 சதவீதம் அதிகரித்திருக்கிறது. தொற்று நோய், அதிக எண்ணிக்கையிலான இரத்த தானம் செய்பவர்களின் தேவையை அதிகரித்துள்ளது என்றார். மேலும் #TogetherWeCan என்ற ஹேஷ்டேக்கை பரப்புங்கள் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார் ரகுல்.நடிகை சமீபத்தில் மாலத்தீவில் குடும்பத்துடன் தனது விடுமுறையை முடித்துவிட்டு மீண்டும் இந்தியாவுக்கு வந்தார். தீவு தேசத்தில் ஒரு சிறந்த நேரத்தைக் கொண்ட தனது குடும்பத்தினருடன் நிறையப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொண்டார். உண்மையில், மாலத்தீவில் விடுமுறைக்கு வந்தபோது அவரது பெற்றோர் தங்கள் திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடினர்.
கமல்ஹாசனின் இந்தியா 2 தவிர, நடிகை சிவகார்த்திகேயனின் அயலான் என்ற அறிவியல் பின்னணி கதையில் நடிக்கிறார் ரகுல். இந்தியன் 2 படத்தில் மேலும் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோருடன் ரகுல் திரையைப் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.