மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது தலைவி. ஏ.எல்.விஜய் இயக்குகிறார். ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இன்று ஜெயலலிதாவின் நான்காவது ஆண்டு நினைவு தினம் ஆகும். இதனையொட்டி , கங்கனா ரனாவத் 'தலைவி' படத்திலிருந்து சில புதிய ஸ்டில்களைப் பகிர்ந்துள்ளனர். 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தமிழக முதல்வர் ஜெயலலிதா இருதய நோயால் 2016 டிசம்பர் 5 அன்று காலமானார்.
படத்தின் புதிய ஸ்டில்களைப் பகிர்ந்த கங்கனா, "ஜெய அம்மாவின் 4ம் ஆண்டு நினைவு நாளில், எங்கள் படமான தலைவி ஸ்டில்களைப் பகிர்ந்து கொள்கிறோம். எனது அணிக்கு, குறிப்பாக எங்கள் படகுழுவின் டைரக்டர் விஜய் படத்தை ஒரு வாரத்தில் முடிக்க ஒரு சூப்பர் மனிதனைப் போல செயல் பட்டுக்கொண்டிருக்கிறார்".
தலைவி படத்தில் அரவிந்த் சுவாமி அதிமுக தலைவர் எம்.ஜி.ஆராக நடிக்கிறார். படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்படும். இன்னும் ஒரு வாரத்தில் பட பணிகள் அனைத்தும் நிறைவாகும் என்று தெரிகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.
ஜெயலலிதா வாழ்கை படத்துக்காக சில பயிற்சிகலை கங்கனா மேற்கொண்டார். பரதநாட்டியம் கற்றுக் கொண்டார். மேலும் பிற்பகுதி காட்சிகளில் நடிக்க கூடுதல் வெயிட் போட்டார்.
கங்கனா ரனாவத் தற்போது பாலிவுட்டில் குறிப்பிடத் தகுந்த நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். நடித்துக் கொண்டே தனது அரசியல் ஈடுபாட்டையும் வெளிபடுத்தி வருகிறார். பிரதமர் மோடிக்கு ஆதரவான கருத்துக்கள் பகிர்வதுடன் மகாராஷ்டிரா ஆளும் கட்சி சிவசேனா உடன் மோதல் போக்கைக் கடைப் பிடித்து வருகிறார். மத உணர்வைத் தூண்டும் விதத்தில் இவர் சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்கள் வெளியிட்டுள்ளதாக அவர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகும்படி 3முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இதற்காக ஐகோர்ட்டில் கங்கனா இடை கால உத்தரவு பெற்றிருக்கிறார்.