Saturday, Apr 17, 2021

கேப்பியின் சந்தேகம் ,சேஃப் கேம் விளையாடும் பாலா - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 79

by Mahadevan CM Dec 23, 2020, 10:38 AM IST

முக்காபுலா பாடலோடு தொடங்கியது நாள். நேத்து முதல் ஆளா ஆடிட்டு இருந்த கேப்டன் பாலா இன்னிக்கு தூங்கிட்டு இருந்தார். கேப்டன் பதவி ஒரு வாரத்துக்கு இருக்குய்யா.இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க் பி பார் பால், சி பார் கேட்ச். வெளிய ஒரு பெரிய செட் போட்டுருந்தாங்க. அதுல நீளமான ஒரு பைப்ல பந்துகள் வரும். ஹவுஸ்மேட்ஸ் ரெண்டு அணிகளா பிரிஞ்சு அதை பிடிக்கனும். சைஸ் வாரியா பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

டீம் பிரிக்கும் போதே ரொம்ப ஜாக்கிரதையா பேசினார் பாலா. அவரே டீம் பிரிச்சா அதுல ஏதாவது பிரச்சினை வருமோனு பயம். அதனால ரெண்டு நபர்களை தேர்ந்தெடுத்து, அவங்களை பொறுப்பாளர்களா போட்டு, அவங்க மூலம் டீம் பிரிக்கலாம்னு ஐடியா சொன்னாரு. சோம், கேப்பி பொறுப்பாளர்கள்னு சொன்ன உடனே கேப்பி இதுக்கு ஒத்துக்கலை. எல்லாருக்குமே பொறுப்பு இருக்கு அப்படினு மறுத்துட்டாங்க கேப்பி. அப்புறம் ஆரியும், சோம் ரெண்டு பேர் சேர்ந்து டீம் எடுத்தாங்க.

கேப்பிக்கு தன்னை சோம், ரியோ கிட்ட இருந்து பிரிக்க ட்ரை பண்றாங்கனு சந்தேகம். உண்மையும் அது தான். ஏற்கனவே இந்த மாதிரி ரெண்டு தடவை பாலா டீம் பிரிச்சதால, கேப்பி இதுக்கு ஒத்துக்கலை. ஆனா கடைசில கேப்பி நினைச்சா மாதிரி ரியோ, சோம், கேப்பி 3 பேரும் ஒரே டீம்ல இருந்தாங்க. டீம்லாம் பிரிச்சதுக்கு அப்புறம் ரியோ, சோம் ரெண்டு பேரையும் கூப்பிட்டு பாலா மேல புகார் சொல்லிட்டு இருந்தாங்க கேப்பி.

இந்த கேம் முழுவதும் ரொம்பவும் கேர்புல்லா விளையாடினாரு பாலா. ரூல்ஸ் பத்தி பேசி, எல்லாருக்கும் வாய்ப்பு கொடுக்கறது நிறைய விஷயங்கள் ட்ரை பண்ணினாரு. ஆனா அதுவே ஓவர் டோஸ் ஆகிடுச்சு. ஆக்சுவலா இது பாலாவோட ஸ்டைல் கிடையாது. அதிரடியாவும், புதுமையாவுமெதையாவது செய்யறது தான் பாலாவோட ஸ்டைல். ஆனா கேப்டனா இருக்கறதால ஒன்சைடா விளையாடினாருனு பேர் வரக்கூடாது, தன்னால எந்த பிரச்சினையும் வரக்கூடாதுனு ரொம்ப சேஃப் கேம் விளையாடினாரு பாலா.

எப்பவும் போல விளையாடிருந்தாலே போதும். நமக்கு எது சரியா வருமோ, எதுல நாம ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கோமோ அதை செய்யனும். புதுசா ட்ரை பண்ணி சொதப்பல்ல முடிஞ்சதுனு சொல்லனும்.கேம் ஆரம்பிச்சு முதல் பந்தை சோம் டீம் பிடிச்சாங்க. அப்ப பிக்பாஸ் கூப்பிட்டு இந்த கேம் புரியுதானு கேட்டுகிட்டாரு.

கேம் ஆரம்பிச்சதுக்கு அப்புறமும் ரூல்ஸ், ரூல்ஸ்னு பேசிட்டே தானிருந்தாங்க. ஆனா ஒவ்வொரு பந்தை பிடிக்கும் போதும்ரெண்டு டீமும் சண்டை போட்டுட்டே தான் இருந்தாங்க. அதுவும் ஒரே சண்டை. இந்த சீசன் பொறுத்த வரைக்கும் குரூப் கேமுக்கு ஒத்து வர மாட்டேங்கறாங்க. எல்லாரும் சேர்ந்து விளையாடனும்னு சொன்னாலே, அது படு மொக்கையா முடியுது.

இந்த சீசன் கண்டஸ்டண்ட்ஸ் டீம் கோ ஆர்டினேஷன்னா என்னானு கேக்கறாங்க. கிரியேட்டிவிட்டிங்கறது சுத்தமா கிடையாது. கேமை சுவாரஸ்யமா விளையாடனும்னு தெரியாது. அவங்களுக்கு தெரிஞ்ச ஒரே விஷயம் சண்டை சண்டை, சண்டை. அது ஒன்னு தான்.

டீம் சேர்ந்து செய்யக்கூடிய எல்லா டாஸ்க்கையும் படுபயங்கரமா சொதப்பினது தான் வரலாறு. இது நல்லா தெரிஞ்சும் மறுபடியும் அதே மாதிரி ஒரு டாஸ்க் கொடுத்ததுக்கு பிக்பாஸ் டீமை தான் கழுவி ஊத்தனும்.

போன சீசன்ல வந்தா மாதிரி சைக்கிளிங் டாஸ்க், தங்க முட்டை டாஸ்க் மாதிரி ஏதாவது கொடுத்திருக்கலாம். தனித்தனியா டாஸ்க் செய்யும் போது சண்டை போட்டாலும், கொஞ்சமாவது பார்க்க முடியுது.

ஆனா நேத்து நடந்ததை எப்படி எழுத முடியும். அந்த பைப் வழியா பந்து வருது. ஒரு டீம் அதை பிடிக்கறாங்க. பிடிச்சதுக்கு அப்புறம் கன்னாபின்னானு கத்தி சண்டை போடறாங்க. இதையே ரிப்பீட்டா செஞ்சுட்டே இருந்தாங்க. அதுவும் இந்த டாஸ்க் விடிய விடிய நடத்துறாங்க. இதுக்கு விடிய விடிய தூங்காம முழிச்சுட்டு இருக்கனும்னு சொல்லிருக்கலாம்.

என்னமோ போங்க. இந்த சீசன் இருக்க இருக்க மொக்கையா போய்ட்டு இருக்கு.

You'r reading கேப்பியின் சந்தேகம் ,சேஃப் கேம் விளையாடும் பாலா - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 79 Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை