கணவருடன் பிஸ்னஸ் பார்ட்னர் ஆன நடிகை..

by Chandru, Dec 23, 2020, 10:00 AM IST

பிரபல நடிகைகள் சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கி பிஸியாக இருக்கும் வரை வேறு எதிலும் கவனம் செலுத்துவதில்லை. 30 வயது கடந்து விட்டால் அவர்களது பட வாய்ப்புகள் குறைகிறது. திருமணம், குழந்தை என்று வாழ்க்கை அடுத்த கட்டத்துக்கு நகர்வதால் தங்களது வருமானத்தை இழக்காத வகையில் கவனத்தை பிஸ்னஸ் தொடங்குவதில் திருப்புகின்றனர்.தமன்னா நகை டிசைனிங் செய்யும் பிஸ்னஸ் செய்கிறார். ரகுல் ப்ரீத் உடற்பயிற்சி கூடங்கள் (ஜிம்) தொடங்கி நடத்தி வருகிறார். சமந்தா காஸ்டியும் டிசைன், ஊட்டச்சத்து உணவுகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

பிரணிதாவும் வாட்டர் பாட்டிலிங் கம்பெனி நடத்துகிறார். நமீதா பில்டிங் கன்ஸ்ட்ரக்‌ஷன் பிஸ்னஸ் செய்கிறார். நடிகை ஷில்பா ஷெட்டி நட்சத்திர ஓட்டலில் பல கோடி முதலீடு செய்து அதில் கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகையும் தற்போது பிஸ்னஸ் பார்ட்னர் ஆகி இருக்கிறார்.நடிகை காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் இறுதியில் இண்டீரியர் டிசைனிங் தொழில் அதிபரும் தனது பாய்ஃபிரண்டுமான கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் தேனிலவுக்காக மாலத்தீவு சென்று ஒரு மாதம் தங்கி இருந்து அங்குள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசித்தனர். இருவரும் ஜோடியாக கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவிங் செய்து நீந்தினர். அந்த புகைப் படங்களை காஜல் இணைய தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

தேனிலவு முடிந்த நிலையில் இந்தியா திரும்பிய காஜல் நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அடுத்து கைவசம் இந்தியன் 2 படம் உள்ளது. ஆனால் முன்புபோல் வாய்ப்பு வருமா என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டுள்ளதால் தனது கவனத்தை பிஸ்னஸ் பக்கம் திருப்பி இருக்கிறார். ஏற்கனவே குடும்ப பிஸ்னஸான நகை வியாபாரத்தில் பங்குதாரராக இருக்கிறார். தவிரச் சமீபத்தில் வீடியோ கேம்ஸ் கம்பெனியில் பங்குகள் வாங்கி உள்ளார். தற்போது கணவரின் கம்பெனியில் பங்குதாரராகி இருக்கிறார்.

காஜல், கவுதம் இருவரும் புதுவீடு கட்டி குடி புகுந்தனர். அப்போது இண்டீரியர் டிசைனிங் செய்தபோது வசதிக்கும் தகுதிக்கும் ஏற்ப மேட்சாக குஷன்கள் டிசைன் செய்து விற்பது என்ற ஐடியா காஜலுக்கு தோன்றியது அதைக் கணவரிடம் சொல்லி அதற்கான பிஸ்னஸும் கிட்சட் என்ற பெயரில் தொடங்கி விட்டார். அழகான குஷனில் அமர்ந்து குஷன் தலையணைகளை வைத்து கணவருடன் விளையாடும் புகைப்படத்தை காஜல் வெளியிட்டு புரமோஷனையும் தொடங்கி விட்டார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை