Saturday, Apr 17, 2021

காதலன் மீது வழக்கு போட்டு தடை பெற்ற நடிகை புது அவதாரம்..

by Chandru Dec 23, 2020, 11:05 AM IST

மைனா, சிந்து சமவெளி எனப் படங்களைத் தொடங்கிய அமலா பால் பின்னர் கிளாமர் கதாநாயகியாக வலம் வரத் தொடங்கினார். இதற்கிடையில் இயக்குனர் விஜய்யை காதலித்து மணந்தார். ஒரு வருடத்திலேயே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். பின்னர் சுதந்திர பறவையான அமலா பால் மீண்டும் படங்களில் நடிப்பதில் வேகம் காட்டினார். ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தார்.

மேலும் பல படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். கடந்த ஆண்டு பாலிவுட் பாடகர் பஹவிதர் சிங் உடன் டேட்டிங் செய்யத் தொடங்கினார், இருவரும் தனியாக இருக்கும் படங்கள் நிச்சயார்த்த படங்கள் என்று சில படங்களை பஹவிதர் வெளியிட்டபோது அவருடன் பிரேக் அப் செய்துகொண்ட அமலா பால் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தனது படங்களை பஹவிதர் வெளியிடக்கூடாது என்று தடை பெற்றார்.கடந்த சில மாதங்களாக அமலாபால் ஆன்மிகத்தில் கவனம் செலுத்தினார். தியானம், இயற்கையோடு ஒன்றியிருப்பது என்று படங்களை வெளியிட்டர்.

தற்போது அதிரடியாகக் கவர்ச்சி படமொன்றை வெளியிட்டிருக்கிறார். அமலாபால் தனது இணைய தள பக்கத்தில் கூறும்போது, 'ஒரு பாம்பின் தோல் உரிந்து மீண்டும் தனக்கு புதிய தோல் செய்வதுபோல், அல்லது புழுவாக இருந்து பெரிய மாற்றத்துக்குப் பிறகு பட்டாம் பூச்சி சிறகு விரிப்பதுபோல் நான் என்னைத் தூய்மைப்படுத்துகிறேன், குணப்படுத்துகிறேன், உயர்கிறேன், வளர்ந்து வருகிறேன்,மாற்றுகிறேன்,நிபந்தனையின்றி நேசிக்கிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் நிறைய அன்பும் ஆசீர்வாதங்களும். பெரிய அற்புதங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன ' என்றார்.நடிகை அமலா பால் பிரச்சனைகளை எதிர்கொண்ட போதும் நட்சத்திர வெளிச்சம் எப்போதும் அவரை விட்டு விலகியதே இல்லை. அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும், கதைகளும், கதாபாத்திரங்களும் அவரின் மதிப்பையும், நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றுத் தந்துள்ளது. நேர்த்தியான, தரமான கதைகள், கனமான கதாபாத்திரங்கள் என ரசிகர்கள் கொண்டாடும் கதாபாத்திரங்களை தொடர்ந்து வெப் சீரிஸ்களிலும், திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

தற்போது இவர் கன்னடத்தில் “யூ டர்ன்” ( U Turn) படம் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் பவன் குமார் இயக்கும், புதிய வெப் சீரிஸான குடி யெடமைதே ( Kudi yedamaithe ) வெப் சீரிஸில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த 8 பகுதிகள் கொண்ட ஆஹா (aha) ஒரிஜினல் தொடர், தெலுங்கு ரசிகர்கள் இதுவரை கண்டிராத வகையிலான, ஃபேண்டஸி திரில்லராக உருவாகிறது. இத்தொடரில் அமலா பால் ஜோடியாக ராகுல் விஜய் நடிக்கிறார். இது மற்ற திரைப் படங்கள், தொடர்கள் போல வழக்கமான ஹீரோ ஹீரோயின் கதாபாத்திரங்கள் அல்ல. இக்கதையின் மையம் ஒரு காவல் துறை அதிகாரிக்கும், டெலிவரி பையனுக்கும் நடக்கும் டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டது. இது தவிர இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் நெட் பிளிக்ஸ் ஆந்தாலஜி சீரிஸிலும் அமலா பால் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.

தற்போது அவரது சொந்த தயாரிப்பில் உருவாகும் “கடாவர்” (cadaver) படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது போஸ்ட் புரடக்சன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில், இப்படத்தின் ரிலீஸ் அறிவிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இந்த படங்கள், தொடர்கள் தவிர அமலாபால் ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் விஷேஷ் பிலிம்ஸ் (Jio Studios & Vishesh Films) நிறுவன தயாரிப்பில் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.

You'r reading காதலன் மீது வழக்கு போட்டு தடை பெற்ற நடிகை புது அவதாரம்.. Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Cinema News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை