சிறுமியை துன்புறுத்தியதாக பானுப்பிரியா மீது வழக்கு..

வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீதும், அவரது சகோதரர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல மொழிகளில் நடித்த பிரபல நடிகை பானுப்பிரியா, சென்னை தி.நகரில் வசித்து வருகிறார். அவரது அம்மா மற்றும் தம்பி கோபாலகிருஷ்ணன் உடனிருக்கிறார்கள். இந்நிலையில், ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்தாண்டில் பானுப்பிரியா வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பானுப்பிரியா வீட்டில் நகைகளை அந்த வேலைக்கார சிறுமி திருடியதாக கூறி, திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து, ஆந்திராவுக்கு திரும்பிய அந்த சிறுமி தனது பெற்றோரிடம், தன்னை பானுப்பிரியா வீட்டில் அடித்து துன்புறுத்தியதாகவும், செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து அந்த சிறுமியின் பெற்றோர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் பானுப்பிரியா குடும்பத்தினர் மீது புகார் கூறியுள்ளனர். இந்த புகார், கோதாவரி மாவட்ட எஸ்பி மூலமாக சென்னை பாண்டிபஜார் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.

தற்போது, பானுப்பிரியா, அவரது தம்பி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மீது சிறார் கொடுமை தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதே போல் பானுப்பிரியா வீட்டில் வேலை பார்த்த ஒருவர் மீது நகைகளை திருடியதாக பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு, அந்த வேலையாள் கைது செய்யப்பட்டார். பின்னர், அவரும் வழக்கு விசாரணையின் போது, தன்னை பானுப்பிரியாவின் தாயார் செக்ஸ் கொடுமைப்படுத்தியதாக புகார் செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
More Chennai News
iit-student-fatima-death-is-not-suicide-says-m-k-stalin
ஐஐடி மாணவி மரணத்தில் பல மர்மங்கள் உள்ளது.. ஸ்டாலின் குற்றச்சாட்டு
edappadi-government-reducing-rs-2081-crore-rent-for-chepauk-stadium-to-rs-250-crore
அ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு
president-notifies-transfer-of-justice-ap-sahi-as-chief-justice-of-madras-hc
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்..
heavy-rain-may-continue-in-tamilnadu-coastal-districts
தமிழகத்தில் 3 நாள் கனமழை தொடரும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்
honourary-doctorate-awarded-to-tamilnadu-chief-minister-edappadi-palanichamy
எடப்பாடி பழனிச்சாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்.. எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் வழங்கியது
heavy-rains-continue-in-chennai-kanchi
சென்னையில் கனமழை தொடரும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..
admk-ex-councilor-jayagopal-bail-application-adjourned-to-17th-october
பேனர் சரிந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜாமீன் விசாரணை தள்ளி வைப்பு
modi-jinping-handshake-sculpture
மாமல்லபுரம் சந்திப்பு.. மோடி-ஜின்பிங்க் சிற்பம்..
pm-modi-xi-agree-on-new-trade-mechanism-at-summit-talks-in-mamallapuram
வர்த்தகம், முதலீடு குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு.. மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு
modi-thanked-tamil-people-and-state-government-for-support-in-xinping-meet
தமிழர்களின் இதமான அன்பு எப்போதும் தனித்து நிற்கும்.. பிரதமர் மோடி நன்றி..
Tag Clouds