இன்று மாலை கூடுகிறது திமுக மா.செ. கூட்டம்..

by எஸ். எம். கணபதி, Feb 17, 2020, 10:29 AM IST

திமுக மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம், இன்று மாலை நடைபெறுகிறது.

திமுகவில் உட்கட்சி தேர்தல், வரும் 21ம் தேதி தொடங்கி, தொடர்ச்சியாக நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. திமுகவில் உட்கட்சி தேர்தல் என்றாலே பலத்த போட்டி இருக்கும். ஆள்கடத்தல், கோஷ்டிச் சண்டைகள் எல்லாம் சாதாரணமாக நடக்கும்.

இந்நிலையில், உட்கட்சி தேர்தலை சுமுகமாக நடத்தி முடிப்பது குறித்தும், நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களை சந்திப்பது குறித்தும் விவாதிப்பதற்காக மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தை திமுக தலைமை கூட்டியுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குிறார். கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கின்றனர்.

கூட்டத்தில் உட்கட்சிப் பூசல்கள் குறித்தும், நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் சீட் ஒதுக்கீடு செய்வது குறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a reply