அதிமுக அரசின் 3 ஆண்டு சாதனை மலர் வெளியீடு..

by எஸ். எம். கணபதி, Feb 17, 2020, 10:34 AM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசின் 3 ஆண்டு சாதனை மலர் இன்று வெளியிடப்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்பு ஆளும் அதிமுகவில் பல அரசியல் குழப்பங்கள் நிகழ்ந்தன. இதன் முடிவில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி 2017 ஆண்டு பிப்.16ம் தேதி பதவியேற்றார். இதற்கு பின், பல்வேறு அரசியல் நெருக்கடிகளை அதிமுக சந்தித்தது. எனினும், மூன்றாண்டுகளை அதிமுக அரசு நிறைவு செய்து, இன்று 4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்நிலையில், இன்று காலையில் அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனை மலர் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இ்ந்த மலரை வெளியிட்டார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலரை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.


Leave a reply