குடியுரிமை திருத்த சட்டம் வாபஸ் பெறப்படாது.. பிரதமர் திட்டவட்டம்

by எஸ். எம். கணபதி, Feb 17, 2020, 10:23 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டம், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து ஆகியவற்றில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நேற்று தனது வாரணாசி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ரூ.1250 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற நாட்டுக்கு அவசியமான முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம். இவற்றுக்காக நீண்ட காலமாக நாடு காத்திருந்தது. இந்த முடிவுகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்கள் ஏற்பட்டுள்ள நிலையிலும் இந்த முடிவுகளில் இருந்து நாங்கள் பின்வாங்கப் போவதில்லை.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். முன்னதாக, சுவாமி விஸ்வரதய்யா குருகுலம் நூற்றாண்டு நிறைவு விழாவில் மோடி பங்கேற்றார். மேலும், வாரணாசியில் 63 அடி உயர தீன்தயாள் உபாத்யாயா சிலையை அவர் திறந்து வைத்தார்.

You'r reading குடியுரிமை திருத்த சட்டம் வாபஸ் பெறப்படாது.. பிரதமர் திட்டவட்டம் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை